ரூ.6.95 லட்சத்தில் 2020 டாடா நெக்ஸான் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

0

New Tata Nexon suv BS6 1

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எஸ்யூவி உட்பட மொத்தமாக நான்கு கார்களை இன்றைக்கு விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. குறிப்பாக முந்தைய மாடலை விட பல்வேறு மேம்பாடான வசதிகள் மற்றும் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை இந்த மாடல் பெற்றுள்ளது.

Google News

இன்றைக்கு டாடா நிறுவனம் இந்தியாவின் முதல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற நெக்ஸான் காரின் மேம்பட்ட மாடல் புதிதாக 5 ஸ்டார் ரேட்டிங் வென்ற அல்ட்ராஸ், டிகோர் மற்றும் டியாகோ என மொத்தமாக நான்கு மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் நெக்ஸான் அடிப்படையிலான மின்சார கார் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் வரும் ஜனவரி 28 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ளது. புதிய இம்பேக்ட் 2.0 டிசைன் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டுள்ள அனைத்து மாடல்களிலும், பொதுவாக இந்நிறுவனம் புதிய வடிவத்திலான மூன்று கோடுகளை கொண்ட ஏரோ (Tri-Arrow) மார்க்கினை பயன்படுத்த துவங்கியுள்ளது. நெக்ஸானை பொறுத்தவரை வழக்கமான கிரிலுடன் ட்ரை ஏரோ வடிவம் சேர்க்கப்பட்டு புராஜெக்டர் ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்குகளை கொண்டுள்ளது.

நெக்ஸான் காரில் புதிதாக ஐ.ஆர்.ஏ என்ற கனெக்ட்டிவிடி வசதிகளை வழங்கும் அமைப்பானது இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிறுவனம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி உடன் இஎஸ்பி வசதியை அனைத்து வேரியண்டிலும் நிரந்தர அம்சமாக இணைத்து காரின் பாதுகாப்பினை அதிகரித்துள்ளது. டாப் வேரியண்டுகளில் ரோல் ஓவர் மிட்டிகேஷன், டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஹீல் அசென்ட் கட்டுப்பாடு இணைக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய என்ஜின்களில் பிஎஸ் 6 முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. குதிரை திறன் மற்றும் முறுக்கு விசையில் எந்த மாற்றமும் இருக்காது. 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் என்ஜின் 120 ஹெச்பி 5,000 ஆர்.பி.எம் சுழற்சியிலும், 170 என்எம் டார்க்கை 1,750-4,000 ஆர்.பி.எம்-யில் வழங்கும்.

அடுத்து, 1.5 லிட்டர் ரெவோடார்க் டர்போ டீசல் 3,750 ஆர்.பி.எம் சுழற்சியில் 110 ஹெச்பி மற்றும் 1,500-2,750 ஆர்.பி.எம்-ல் 260 என்எம் டார்க் வழங்கும். முன்பு போல, இரண்டு என்ஜினும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோ கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் கிடைக்கும்.

tata nexon

2020 டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப விலை ரூ.6.95 லட்சம் (பெட்ரோல்) மற்றும் டீசல் மாடலின் ஆரம்ப விலை ரூ. 8.45 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.

 

பிஎஸ்6 பெட்ரோல் டீசல்
Tata Nexon XE ரூ. 6.95 லட்சம் ரூ. 8.45 லட்சம்
Tata Nexon XM ரூ. 7.70 லட்சம் ரூ. 9.20 லட்சம்
Tata Nexon XMA ரூ. 8.30 லட்சம் ரூ. 9.80 லட்சம்
Tata Nexon XZ ரூ. 8.70 லட்சம் ரூ. 10.20 லட்சம்
Tata Nexon XZ+ ரூ. 9.70 லட்சம் ரூ. 11.20 லட்சம்
Tata Nexon XZA+ ரூ. 10.30 லட்சம் ரூ. 11.80 லட்சம்
Tata Nexon XZ+ (O) ரூ. 10.60 லட்சம் ரூ. 12.10 லட்சம்
Tata Nexon XZA+ (O) ரூ. 11.20 லட்சம் ரூ. 12.70 லட்சம்

 

tata cars