இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளர்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 2.05 லட்சம் வரையில் பல்வேறு சலுகைகளை பண்டிகை காலத்தை முன்னிட்டு Festival of Cars என்ற பெயரில் அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் அக்டோபர் 31, 2024 வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டியாகோ ஆரம்ப விலை ₹ 4.99 லட்சம்
- அல்ட்ரோஸ் ஆரம்ப விலை ₹ 6.49 லட்சம்
- நெக்ஸான் ஆரம்ப விலை ₹ 7.99 லட்சம்
- ஹாரியர் ஆரம்ப விலை ₹ 14.99 லட்சம்
- சஃபாரி ஆரம்ப விலை ₹ 15.49 லட்சம்
குறிப்பாக டாடா மோட்டார்சின் சஃபாரி மாடலுக்கு அதிகபட்சமாக ரூபாய் 1.80 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது அடுத்தபடியாக ஹாரியர் மாடலுக்கு ரூபாய் 1.60 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக நெக்ஸான், அல்ட்ராஸ், டியோர் மற்றும் டியாகோ போன்ற மாடல்களுக்கும் ரூபாய் 30,000 முதல் 80,000 வரை விலை சலுகையை அறிவித்துள்ளது. வேரியன்ட் வாரியாக இந்த விலையானது குறைக்கப்பட்டு இருக்கின்றது. விலை குறைப்பு ஒவ்வொரு வேரியண்ட்டை பொறுத்து மாறுபடக்கூடும் மேலும் கூடுதலாக ரூபாய் 45 ஆயிரம் வரை பல்வேறு சலுகைகளை இந்நிறுவனம் அறிவித்திருக்கின்றது.
அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் அனைத்தும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. டீலர்களை பொறுத்து இந்த சலுகைகள் மாறுபடும் மேலதிக விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டாடா மோட்டார்ஸ் டீலர்களை அணுகுங்கள்