ஐரோப்பா சந்தையில் க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரக பிரிவில் முன்னணி மாடலாக விளங்கும் ரெனோ கேப்டூர் (Captur) எஸ்யூவி இந்தியாவில் இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வருவதை பிரெஞ்சு நாட்டு தயாரிப்பாளர் அதிகார்ப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
ஐரோப்பியா மற்றும் ரஷ்யா சந்தையில் அமோகமான ஆதரவினை பெற்று விளங்கும் ரெனோ நிறுவனத்தின் கேப்டூர் M0 பிளாட்ஃபாரத்தில் டஸ்ட்டர் காருக்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ள இந்த எஸ்யூவி விற்பனையில் உள்ள க்ரெட்டா , காம்பஸ் , எஸ்யூவி 500 உள்ளிட்ட மாடல்களுக்கு மிகுந்த சவாலாக அமைந்துள்ளது.
டஸ்ட்டர் மாடலில் உள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 hp பவர் மற்றும் 142 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 5 வேக மேனுவல் தவிர சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110 hp பவர் மற்றும் 245 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 6 வேக மேனுவல் தவிர 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர ஆல்வீல் டிரைவ் வேரியன்ட் ஆப்ஷனலாக விற்பனைக்கு கிடைக்கலாம்.
பல்வேறு நவீன வசதிகளான எல்இடி ஹெட்லேம்ப் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள் ஆகியவற்றுடன் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை கொண்டதாகவும் 2,673 மிமீ வீல்பேஸ் பெற்ற மாடலாக இருக்கும் என்பதனால் தாராளமான இடவசதி பெற்ற மாடலாகவும் 387 லிட்டர் கொள்ளளவு பெற்ற பூட் வசதியை, மேலும்அதிகரிக்க பின்புற இருக்கைகளை மடக்கினால் 1,200 லிட்டர் வரை விரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நுட்பவிபரங்கள் மற்றும் எஞ்சின் விபரங்கள் ஆகியவற்றை ரெனால்ட் நிறுவனம் அதிகார்வப்பூர்வமாக இதுவரை வெளியிடவில்லை, ஆனால் ரெனோ கேப்டூர் இந்தியா வருவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் ரெனால்ட் நிறுவனத்தின் டீலர் எண்ணிக்கை 300 எட்டியுள்ள நிலையில் வரும் நாட்களில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு சேவை தொடர்பான வசதிகளை வழங்கவும், 2020 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் டாப் 5 மோட்டார் வாகன தயாரிப்பாளர் என்ற இடத்துக்குள் பெற ரெனால்ட் திட்டமிட்டுள்ளது.
கேப்டூர் இந்தியா வருகை உறுதி செய்யப்பட்டுள்ளதால், எனவே இந்நிறுவனத்தின் கூட்டணி மாடலான நிசான் நிறுவனத்தின் கிக்ஸ் எஸ்யூவி இந்தியா வரும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.