Automobile Tamilan

இந்தியாவில் ரெனால்ட் முதல் எலக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்

upcoming renault ev and new suvs

ரெனால்ட் இந்தியா நிறுவனம் எலக்ட்ரிக் வாகனம் உட்பட 5 கார்களை விற்பனைக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. டஸ்ட்டர், 7 இருக்கை பெற்ற பிக்ஸ்டெர் ஆகிய இரண்டு மாடல்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில் ரெனால்ட் கூடுதல் வசதிகளை பெற்ற ட்ரைபர், க்விட் மற்றும் கிகர் எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த வாகனங்களின் அதிகப்படியான பாகங்கள் உள்நாட்டிலே தயாரிக்கப்படுகின்றது.

Upcoming Renault Models

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ரெனால்ட் இந்தியா  தனது முதல் EV மாடலை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த மாடல் அனேகமாக க்விட் காரின் அடிப்படையிலாக அமைந்திருப்பதுடன் துவக்கநிலை எலக்ட்ரிக் சந்தைக்கு ஏற்ற மாடலாகவும், உள்நாட்டிலே 85-90% உதிரிபாகங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதால் விலை மிகவும் சவாலாக அமைந்திருக்கலாம். இந்த மாடல் அனேகமாக 2025 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

ரெனால்ட் டஸ்ட்டர், பிக்ஸ்டெர்

5 இருக்கை பெற்ற B+ பிரிவில் வரவுள்ள ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி ஆனது சில வாரங்களுக்கு முன்பாக டேசியா பிராண்டில் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையிலான மாடலை 2025 ஆம் ஆண்டு வெஎளிப்படுத்துமா அல்லது அதற்கு முன்பாக கொண்டு வர வாய்ப்புள்ளது. 7 இருக்கை பெற்ற டஸ்ட்டர் அடிப்படையிலான பிக்ஸ்டெர் மாடல் 2025ல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய தலைமுறை ட்ரைபர் மற்றும் கிகர்

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட 7 இருக்கை பெற்ற ட்ரைபர் எம்பிவி மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் ரெனோ கிகர் வரவுள்ளது. காம்பேக்ட் சந்தையில் மிக கடும் போட்டியை எதிர்கொண்டு வரும் கிகர் கார்களின் போட்டியாளர்கள் கூடுதல் வசதியாக ADAS உட்பட பல்வேறு நவீன நுட்பங்களை பெற்று வருவதனால் அதற்கு ஈடான அம்சங்கள் புதிய டிசைனை இரண்டு மாடல்களும் பெறவாய்ப்புள்ளது.

ஆனால் ரெனால்ட் க்விட் பெரிய அளவில் மேம்பாடுகளை வழங்குமா என்ற கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிறிய ரக கார்களுக்கான வரவேற்பு மிகப்பெரும் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. குறிப்பாக மாருதி ஆல்டோ, செலிரியோ, க்விட் கார்களுக்கு போதிய வரவேற்பு முன்பை போல இல்லை என்பதனால் சிறிய அளவிலான மேம்பாடுகளை மட்டுமே க்விட் பெறக்கூடும்.

Exit mobile version