
ரெனால்ட் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட டிசைன் கொண்ட 7 இருக்கை பெற்ற ட்ரைபர் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் 72hp பவர் வெளிப்படுத்தும் எஞ்சினுடன் விலை ரூ.6.94 லட்சம் முதல் ரூ.10.50 லட்சம் வரை ஆன்-ரோடு விலை அமைந்துள்ளது.
Authentic, Evolution, Techno, மற்றும் Emotion என நான்கு விதமான வேரியண்டடை பெற்றுள்ள நிலையில் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, இஎஸ்சி, ரியர் பார்க்கிங் சென்சார், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன், 3 புள்ளி இருக்கை பெல்ட் என பலவற்றை பெற்றதாக அமைந்துள்ளது.
2025 Renault Triber on-road price
ரெனால்டின் ட்ரைபரில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்ட் ரூ.6.94 லட்சம் முதல் ரூ.9.64 லட்சம் வரையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற ஒற்றை டாப் வேரியண்ட் ரூ.10.20 லட்சத்தில் அமைந்துள்ளது. கூடுதலாக டாப் எமோஷன் வேரியண்டில் டூயல் டோன் கொண்ட மாடல் விலை ரூ.9.91 லட்சம் முதல் ரூ.10.50 லட்சத்திலும் ஆன்-ரோடு விலை அமைந்துள்ளது.
| Variant | Price | on-road Price |
| Authentic | Rs 5,76,300 | Rs 6,93,678 |
| Evolution | Rs 6,63,200 | Rs 8,01,321 |
| Techno | Rs 7,31,800 | Rs 8,90,630 |
| Emotion | Rs 7,91,200 | Rs 9,63,097 |
| Emotion AMT | Rs 8,38,800 | Rs 10,19,865 |
| Emotion MT DT | Rs 8,12,300 | Rs 9,90,875 |
| Emotion AMT DT | Rs 8,59,800 | Rs 10,49,876 |
கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை விபரம் தமிழ்நாட்டினை அடிப்படையாக கொண்டு, வரும் செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி 2.0 வரிக்கு ஏற்புடையதாகும்.
Renault Triber வாங்கலாமா ?
பட்ஜெட் விலையில் 7 நபர்கள் பயணிக்கின்ற இருக்கை கொண்ட ட்ரைபர் எம்பிவி காரில் 5 பெரியவர்கள் மற்றும் பின்புற மூன்றாவது வரிசையை இருக்கை சிறியவர்களுக்கு பயன்படுத்தினால் சிறப்பான இடவசதி பெறக்கூடும். போதிய அளவிலான அடிப்படையான பாதுகாப்பு, பின் இருக்கை வரிசையை மடக்கினால் சிறப்பான பூட் வசதி பெறக்கூடும்.
6 ஏர்பேக்குகளை பெற்றிருக்கின்ற காரில் பவர் மிகப்பெரிய அளவில் குறைவாகவும், மலிவான பிளாஸ்டிக் பாகங்களை பெற்றுள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலை பயணங்களுக்கு, அதிக சுமை எடுத்துச் சென்றால் சற்று சிரமத்தை எதிர்கொள்ளுகின்றது, நகரப்புற பயன்பாடுகளுக்கு ஏற்றதாக உள்ளது.
என்ஜின் விபரம்
1.0 லிட்டர் எனர்ஜி பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
வேரியண்ட் வாரியான வசதிகளை பொறுத்தவரை Authentic, Evolution போன்றவற்றில் 14 அங்குல ஸ்டீல் வீல் கொடுக்கப்பட்டு மேனுவல் ஏசி, புராஜெக்டர் ஹெட்லேம்ப், டயர் ரிபேர் கிட், ரிமோட் சென்டரல் லாக்கிங், பவர் விண்டோஸ் உள்ளிட்ட அம்சங்களை பெற்று வெள்ளை, கருப்பு மற்றும் சில்வர் ஆகிய நிறங்கள் உள்ளது.
Evolution வேரியண்டில் கூடுதலாக வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 4 ஸ்பீக்கர்கள், 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன், பின்புற கேமரா மற்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கான கிராப் ஹேண்டில்கள் வெள்ளை, கருப்பு, கிரே , ப்ளூ மற்றும் சில்வர் நிறங்கள் உள்ளது.
Techno வேரியண்டில் 15 அங்குல ஸ்டீல் வீல் உடன் வீல் கேப் பெற்று எல்இடி டெயில் லைட், க்ரோம் சேர்க்கப்பட்ட பம்பர், பக்கவாட்டில் கருப்பு கிளாடிங், கூல்டு கன்சோல்
ஸ்டியரிங் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் தொலைபேசி கட்டுப்பாடுகள், இரண்டாவது வரிசை 12V சாக்கெட் பின்புற வைப்பர் மற்றும் வாஷர் வெள்ளை, கருப்பு, கிரே , ப்ளூ, அம்பேர் டெர்ராகோட்டா மற்றும் சில்வர் நிறங்கள் உள்ளது.
டாப் Emotion LED DRLகள், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், மூடுபனி விளக்குகள், இரட்டை-தொனி சக்கர கவர்கள், தானியங்கி-மடிப்பு ORVMகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 7-இன்ச் TFT டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ ஹெட்லைட்கள், தானியங்கி வைப்பர்கள், க்ரூஸ் கட்டுப்பாடு, பின்புற டிஃபாகர்
முன் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றை பெற்றுள்ளது.
வெள்ளை, கருப்பு, கிரே , ப்ளூ, அம்பேர் டெர்ராகோட்டா மற்றும் சில்வர் நிறங்கள் கூடுதலாக வெள்ளை, கருப்பு, அம்பேர் டெர்ராகோட்டா என மூன்றிலும் கருப்பு மேற்கூரை வழங்கப்பட்டு டூயல் டோன் வண்ணங்கள் என மொத்தமாக 9 நிறங்களில் கிடைக்கின்றது.
GST 2.0 Price updated – 12-09-2025