Automobile Tamilan

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கூல் யெல்லோ ரேவ் கான்செப்ட் அறிமுகம்

maruti suzuki swift

2024 டோக்கியா ஆட்டோ சலூன் அரங்கில் சுசூகி நிறுவனம் 4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரில் கூல் யெல்லோ ரேவ் என்ற கான்செப்ட், சூப்பர் கேரி மவுன்டேயின் ட்ரையில், ஸ்பேசியா கிட்சன் கான்செப்ட் ஆகியவற்றை காட்சிப்படுத்தியுள்ளது.

ஜப்பான் சந்தையில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் விற்பனையில் கிடைக்கும் நிலையில் இந்திய சந்தையில் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Suzuki Swift Cool Yellow REV concept

பிரத்தியேகமாக கொடுக்கப்பட்டுள்ள மேட் கூல் மஞ்சள் மெட்டாலிக் நிறத்தை அடிப்படையாக கொண்டு சுசூகி ஸ்விஃப்ட் கான்செப்ட் காருக்கு பிரத்யேக நிறமாகும்.
மேலும் கூடுதலாக “4 வது” தலைமுறை, ஸ்விஃப்ட் என்பதனை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மற்றபடி, புதிய மூன்று சிலிண்டர் Z12E பெட்ரோல் என்ஜின்  5,700rpm-ல் 82hp  மற்றும் 4,500rpm-ல் 108Nm டார்க் வழங்குகின்றது. மைல்டு ஹைபிரிட் பெற  DC சிங்கோரேனஸ் மோட்டாரிலிருந்து 3.1hp மற்றும் 60Nm டார்க் வழங்குகின்றது. WLTP முறை மைலேஜ் சோதனையில் ஹைபிரிட் அல்லாத வேரியண்ட்  23.4kpl மற்றும் ஹைபிரிட் வேரியண்ட் 24.5kpl ஆக சான்றியளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி என இரு விதமான ஆப்ஷனை பெற உள்ளது ஆனால் இந்திய சந்தைக்கு ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம்.

சுப்பர் கேரி மவுன்டெயின் ட்ரையில் கான்செப்ட்

சுசூகி சூப்பர் கேரி டிரக்கின் அடிப்படையில் மவுன்டெயின் ட்ரையில் கான்செப்ட் உருவாக்கப்பட்டு ஆஃப் ரோடு அனுபவத்துக்கு ஏற்றதாக அமைந்திருக்கின்றது. இந்த மாடல் உற்பத்திக்கு வருவதற்கு வாய்ப்பில்லை.

 

Exit mobile version