இந்திய சந்தைக்கு 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வரவிருக்கும் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரினை ஜப்பான் சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு தொழில்நுட்ப விபரங்கள் முழுமையாக வெளியாகியுள்ளது.
முந்தைய K12 என்ஜின் நீக்கப்பட்டு புதிதாக வந்துள்ள சுசூகி Z சீரிஸ் வரிசையில் வந்துள்ள 1.2 லிட்டர், 3 சிலிண்டர் Z12E என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
2024 Maruti Swift Engine Specs
ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கில் இசட் வரிசை 1,197cc, மூன்று சிலிண்டர் 12-வால்வு DOHC 5,700rpm-ல் 82hp மற்றும் 4,500rpm-ல் 108Nm டார்க் வழங்குகின்றது. மைல்டு ஹைபிரிட் பெற DC சிங்கோரேனஸ் மோட்டாரிலிருந்து 3.1hp மற்றும் 60Nm டார்க் வழங்குகின்றது. WLTP முறை மைலேஜ் சோதனையில் ஹைபிரிட் அல்லாத வேரியண்ட் 23.4kpl மற்றும் ஹைபிரிட் வேரியண்ட் 24.5kpl ஆக சான்றியளிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய மாடல் தற்போது, CVT கியர்பாக்ஸ் மட்டுமே உள்ளது. இந்திய சந்தைக்கு வரும்பொழுது இதே என்ஜின் ஆனது 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மட்டும் வழங்கப்பட்டிருக்கலாம்.
9 ஒற்றை வண்ணம் மற்றும் 4 டூயல் டோன் என 13 வண்ண விருப்பங்கள் கொடுக்கப்பட்டு காரின் உள்ளே, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை பெறுவதுடன் சுசூகி கனெக்ட் ஆதரவினை பெற 9 இன்ச் தொடுதிரை ஃப்ரீஸ்டாண்டிங் முறையில் கிடைக்கிறது.
மற்ற அம்சங்களில் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹீட் சீட், இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் மற்றும் குரல் கட்டுப்பாடு ஆகியவை உள்ளன. கூடுதலாக ADAS பாதுகாப்பு தொகுப்பின் மூலம் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப்பிங் ஃபங்ஷன், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், போக்குவரத்து குறியீடுகளை அறியும் வசதி மற்றும் ரியர் கிராஸ் ட்ராஃபிக் அலர்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது.
குறிப்பாக சர்வதேச மாடலில்உள்ள ADAS பாதுகாப்பு தொகுப்பினை, இந்திய சந்தைக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் மிக குறைவாகும்.