Automobile Tamilan

உற்பத்தி நிலை டாடா கர்வ் டிசைன் வெளியானது – Bharat Mobility show 2024

tata curvv suv front

2024 பாரத் மொபைலிட்டி குளோபல் எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் (Tata Curvv) உட்பட 8க்கு மேற்பட்ட வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக டாடா நெக்ஸான் டர்போ பெட்ரோல் சிஎன்ஜி முக்கிய மாடலாக காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில் வெளியிடப்பட உள்ளது.

2023 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட கர்வ் ஆனது எலக்ட்ரிக் மற்றும் ICE என இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் பஞ்ச்.இவி அறிமுகத்தின் பொழுது வெளியிடப்பட்ட ஏக்டிவ் பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள கர்வ் மாடல் 400 முதல் 600 கிமீ வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷனையும் பெற உள்ள இந்த மாடலில் நெக்ஸானில் பயன்படுத்தப்பட்டுள்ள , 115hp பவர் மற்றும் 160Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டீசல் என்ஜினில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் பெற வாயுப்புள்ளது அல்லது நெக்ஸான் போலவே ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

1.2 லிட்டர் TGDi பெட்ரோல் 123bhp மற்றும் 225Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அடுத்து 1.5 லிட்டர் TGDi யூனிட் சிறந்த 168bhp மற்றும் 280Nm டார்க் வெளிப்படுத்தும் என்ஜின் என இரண்டு விதமான டர்போ பெட்ரோல் ஆப்ஷனை டாடா மோட்டார்ஸ் கொண்டுள்ளது. இருவிதமான பெட்ரோல் ஆப்ஷன் பெறலாம் அல்லது ஏதேனும் ஒன்றை மட்டும் பெறக்கூடும்.

கூபே கார்களுக்கு இணையான டிசைன் பெற்றுள்ள டாடா கர்வ் மாடலில் கான்செப்ட் நிலையை நேரடியாக உற்பத்திக்கு கொண்டு வந்துள்ளது. மற்ற விற்பனையில் நெக்ஸான், ஹாரியர் போன்ற கார்களின் வடிவ தாத்பரியத்தை முன்புறத்தில் பெற்று செங்குத்து எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் இணைக்கப்பட்ட எல்இடி ரன்னிங் விளக்குகளை கொண்டுள்ளது. கிரில் ஏற்கனவே உள்ள சஃபாரி போலவே அமைந்து ஸ்டைலிஷான அலாய் வீல் , பிளஸ் டோர் கொண்டு பின்புறத்தில் சாய்வாக அமைந்த மேற்கூறையைப் பெற்று இணைக்கப்பட்ட எல்இடி லைட் பார் மற்றும் டெயில்கேட் லைட் உள்ளது.

இன்டிரியர் தொடர்பாக எந்த படங்களையும் தற்பொழுது வெளியிடப்படவில்லை. அனேகமாக முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளை கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.

நடப்பு 2024 ஆம் ஆண்டின் பண்டிகை காலத்துக்கு முன்பாக விநியோகம் துவங்க உள்ள டாடா கர்வ் விற்பனைக்கு வரும் பொழுது புதிய பெயரை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

மேலும் படிங்க –

Exit mobile version