நாளை துவங்கும் பாரத் மொபைலிட்டி 2024 கண்காட்சியில் என்ன எதிர்பார்க்கலாம்..!

Bharat Mobility Show

இந்தியாவிற்கு பிரத்தியேகமாக வரவுள்ள எதிர்கால மாடல்கள் மற்றும் புதுமையான நுட்பங்கள் என அனைத்தும் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo) அரங்கில் காட்சிக்கு கொண்டு வரப்பட உள்ளது. குறிப்பாக இந்த கண்காட்சியில் எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான முக்கிய மாடல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

பிப்ரவரி 1 முதல் 3 ஆம் தேதி வரை புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ள கண்காட்சியில் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இந்திய தயாரிப்பாள்கள் மாருதி சுசூகி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உட்பட மெர்சிடிஸ்-பென்ஸ் என பல்வேறு பயணிகள் வாகன தயாரிப்பாளர்கள்,  இருசக்கர வாகன தயாரிப்பாளர், வர்த்தக வாகன நிறுவனங்கள் என பலரும் தங்களுடைய எதிர்கால எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் புத்தாக்க முயற்சிகளை காட்சிப்படுத்த உள்ளனர்.

800+ கண்காட்சியாளர்களுடன், நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் பவர்டிரெய்ன் தொழில்நுட்பங்கள் முதல் சார்ஜிங் உள்கட்டமைப்பு வரை ஆட்டோமேஷன் வரை எதிர்கால எரிபொருள்கள் வரை காட்சிக்கு வைக்கப்படும் கார்களை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் அனைத்து வகையான உரையாடல்களும் நடைபெறவுள்ளன.

https://bharat-mobility.com/ இணையதளத்தில் பார்வையாளர்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகின்றது. பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை நமது ஆட்டோமொபைல் தமிழன் வழங்க உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *