இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சி ஆக உருவெடுத்துள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஆம் ஆண்டிற்கான தேதி ஜனவரி 17 முதல் ஜனவரி 22 வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக நடைபெற உள்ள கண்காட்சி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் (புது டெல்லி), யஷோபூமி இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் மற்றும் எக்ஸ்போ சென்டர் (துவாரகா, டெல்லி NCR) மற்றும் இந்தியா எக்ஸ்போ சென்டர் & மார்ட் (கிரேட்டர் நொய்டா) ஆகிய மூன்று இடங்களிலும் ஒரே நேரத்தில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் மொபிலிட்டி கண்காட்சியில் புதிய வாகனங்கள் உட்பட பல்வேறு மேம்பட்ட வாகனங்கள், ஆட்டோமொபைல் நுட்பங்கள், எதிர்கால எலெக்ட்ரிக் வாகன நுட்பங்கள் என அனைத்தும் ஒரே குடையின் கீழ் இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.
கடந்த ஆண்டு வரை நடைபெற்று வந்த ஆட்டோ எக்ஸ்போ முழுமையாக மாற்றப்பட்டு தற்பொழுது பாரத் மொபிலிட்டி என பெயரிடப்பட்டு வரும் ஆண்டுகளில் நடைபெற உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க – 2024 பாரத் மொபிலிட்டி கண்காட்சி சிறப்புகள்