EKA மொபைலிட்டி நிறுவனம் வெளியிட்ட 1.5 டன் எடை பிரிவில் உள்ள K1.5 சிறிய இலகுரக வர்த்தக எலக்ட்ரிக் டிரக் மாடல் 8 விதமான பயன்பாடுகளுக்கு கஸ்டமைஸ் செய்யும் வகையில் ரூ.13.90 லட்சத்தில் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் வெளியானது.
இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மற்றும் ஆதார மையமாக நிலைநிறுத்த, EKA மொபைலிட்டி நிறுவனம் 100 மில்லியன் டாலர் (~ INR 850 கோடி) கூட்டு முதலீட்டில் Mitsui & Co., Ltd. (ஜப்பான்) மற்றும் VDL Groep (நெதர்லாந்து) ஆகியவற்றுடன் ஒரு கூட்டாண்மையை மின்சார வாகனங்களுக்காக அமைத்துள்ளது.
EKA K1.5 Electric LCV Truck
GVW 2510kg கொண்டுள்ள K1.5 எலக்ட்ரிக் டிரக்கில் 32kwh லித்தியம் ஃபெரோஸ் பாஸ்பேட் பேட்டரி பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 240 கிமீ வழங்கும் என CVMR சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 160 கிமீ முதல் 180 கிமீ வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
அதிகபட்சமாக 60Kw பவர் மற்றும் 220Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ ஆக கொண்டு லேடர் ஃபிரேம் சேஸ் பெற்று வால் மவுன்டேட் சார்ஜர் மூலம் 4 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் EKA K1.5 டிரக்கின் வீல்பேஸ் 2900mm கொண்டுள்ளது.
நகர்ப்புற பயன்பாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள k1.5 டிரக்கினை பின்வரும் 8 பயன்பாடுகளுக்கு கஸ்டமைஸ் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது.
- அலுமினிய கண்டெயினர் பாடி
- பக்கவாட்டில் திறக்கும் வகையில் அலுமினிய கண்டெயினர் பாடி
- Ms கண்டெயினர் பாடி
- திறந்த வெளி கண்டெயினர் பாடி / உயர்த்தப்பட்ட பாடி அமைப்பு
- சந்தை பயன்பாடுகளுக்கு ஏற்ற கட்டுமானம்
- குளிர்ந்த நிலையில் பொருட்களை எடுத்துச் செல்ல ஏற்ற வடிவமைப்பு
- இன்ஷ்லேட்டேட் பாடி
- குப்பை சேகரிக்கும் பாடி
இந்தியாவின் முதல் 1.5 டன் பிரிவில் வந்த எலக்ட்ரிக் டிரக் என்ற பெருமையை K1.5 பெற்றுள்ளது.
EKA-9 Staff Electric Bus
இந்த மாடலை தவிர பாரத் மொபைலிட்டி அரங்கில் EKA நிறுவனம் EKA 9 எலக்ட்ரிக் ஸ்டாஃப் பஸ் மாடலை காட்சிப்படுத்தியிருந்தது. 31+1 பயணிகள் பயணிக்கும் வகையில் உள்ள EKA 9 மின்சார பேருந்தில் லிக்யூடு கூல்டு நுட்பத்தை பெற்ற 200kwhr பேட்டரி ஆனது 213 kW பவர் மற்றும் 2352 Nm டார்க் வழங்குவதுடன் மணிக்கு 80 கிமீ வேகமாக உள்ள இந்த பேருந்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் ரேஞ்ச் 200 கிமீ என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
DC விரைவு சார்ஜரை கொண்டு 60-90 நிமிடங்களில் சார்ஜ் செய்ய இயலும் என EKA மொபைலிட்டி உறுதிப்படுத்தியுள்ளது.