விற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்

tata nexon

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட டாடா நெக்ஸான் காம்பாக்ட் எஸ்யூவி ரக மாடல் விற்பனைக்கு வந்த 22 மாதங்களில் 1,00,000 உற்பத்தி இலக்கை கடந்துள்ளது. நெக்ஸான் கார் டாடாவின் இராஞ்சாகாவுன் உற்பத்தி ஆலையில் நீல நிறத்தை ஒரு லட்சமாவது கார் வெளிவந்தது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி 300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் வெனியூ போன்ற எஸ்யூவிகளுக்கு நெக்ஸான் சவாலினை ஏற்படுத்தி வருகின்றது.

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்குகின்றது. மேலும் ரெவோடார்க் வரிசையில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்குகிறது. இந்த இரண்டு எஞ்சினிலும்  6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களில் தேர்வு செய்யலாம்.

இலகுவான ஸ்டீயரிங், உயர்தரமான கட்டுமானத்தை பெற்றதாக விளங்குகின்றது. நெக்ஸான் எஞ்சின் பவர்ஃபுல்லான பெர்ஃபாமென்ஸ் எஸ்யூவி மாடலில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோட் கொண்டுள்ளது.

வரவுள்ள அனைத்து கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களில் அடிப்படையான இரு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவை நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும். டாடா நெக்ஸானின் விலை ரூ.6.58 – 10.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version