மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்

0

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா

ஸ்டைலிஷான தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் லிமிடெட் எடிஷன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பில் கூடுதலான ஆக்செரீஸ்கள் மட்டும் பெற்ற பதிப்பாகும்.

Google News

டீலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ள இந்த பிரத்தியேக ஆக்செரீஸ்களுக்கு கூடுதல் கட்டணமாக ரூ.29,990 வசூலிக்கப்பட உள்ளது. என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட்

ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் போன்ற கார்களுக்கு சவாலாக விளங்குகின்ற விட்டாரா பிரெஸ்ஸா டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளது.

ரூபாய் 29,990 மதிப்புள்ள ஆக்செரீஸ் பேக்கில் வெளிப்புறத்தில் டிசைனிங் செய்யப்பட்ட மேட், பக்கவாட்டில் பாடி கிளாடிங், பாடி கிராபிக்ஸ், முன் மற்றும் பின் பம்பர்களில் க்ரோம் கார்னீஷ், டோர் ஷீல் கார்டு வீல் ஆர்ச் கிளாடிங் கிட் போன்றவற்றுடன் இன்டிரியரில் புதிய இருக்கை கவர், லெதர் ஸ்டீயரிங் வீல் மற்றும் நெக் குஷைன் போன்றவை பெற்றுள்ளது.

விற்பனைக்கு வந்த நாள் முதல் 4 லட்சத்துக்கு மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த காரில் 1.3 லிட்டர் DDiS டீசல் எஞ்சனில் எந்த மாற்றங்களும் இல்லாமல், 90 ஹெச்பி ஆற்றல் மற்றும் 200 என்எம் இழுவைத் திறனை கொண்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் கூடுதலாக ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா