டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி எஸ்யூவி தொடர்ந்து சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. பல்வேறு தோற்ற மாற்றங்களை பெற்று புதுப்பிக்கப்பட்ட இன்டிரியர் தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளது.
என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல், தொடர்ந்து 170hp பவர் மற்றும் 350Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் டர்போ டீசல் பெற்று கியர்பாக்ஸ் விருப்பங்களில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடல் கர்வ் கான்செப்ட்டில் உள்ளதை போன்றே புதிய இரண்டு ஸ்போக் தட்டையான ஸ்டீயரிங் வீல் மற்றும் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் இதே போன்ற ஸ்டீயரிங் வீல் பெற்றுள்ளது. நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டைப் போலவே, சஃபாரியும் க்விக் ஷிஃப்டர் மற்றும் ஸ்டீயரிங் வீலில் ஒளிரும் லோகோவைப் பெறலாம்.
குறிப்பாக, சென்டர் கன்சோலில் இரண்டாவது திரையாக தோன்றும். சமீபத்திய காப்புரிமை வடிவமைப்புகளில் இருந்து தெரியும், HVAC கட்டுப்பாடுகள் தொடுதிரை மூலம் இயக்கப்படலாம். மேம்படுத்தப்பட்ட கியர் லீவர் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றை கொண்டுள்ளது.
ரெட் டார்க் பதிப்பைப் போலவே, சஃபாரியின் ஃபேஸ்லிஃப்ட் ADAS மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுடன் பொருத்தப்பட்டிருக்கும்.
அடுத்த சில மாதங்களில் மேம்பட்ட டாடா சஃபாரி எஸ்யூவி வெளியிடப்பட உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…