Automobile Tamilan

விற்பனையில் டாப் 25 கார்கள் – மே 2023

baleno and fronx

கடந்த மே 2023 மாதந்திர விற்பனை முடிவில் முதல் 25 இடங்களை பிடித்த கார் மற்றும் எஸ்யூவி வாகனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். மாருதி சுசூகி நிறுவனம் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

டாப் 10 இடங்களில் மாருதியின் கார்கள் மட்டுமே 7 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

Top 25 selling cars – May 2023

முதலிடத்தில் உள்ள பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை 18,733 ஆக பதிவு செய்து முதன்மையான மாடலாக விளங்குகின்றது. குறிப்பாக சிறிய ரக கார் சந்தையில் இடம்பெற்றுள்ள ஆல்டோ விற்பனை சரிவை சந்தித்துள்ளது.

எஸ்யூவி ரக சந்தையில் டாடா நெக்ஸான் அமோக வரவேற்பினை பெற்று மே 2023-ல் மொத்தமாக 14,423 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கிரெட்டா மற்றும் நெக்ஸான் எஸ்யூவி காரும் வெவ்வேறு பிரிவில் இருந்தாலும் இரு மாடல்களுக்கு இடையிலான விற்பனை எண்ணிக்கை வித்தியாசம் மிக குறைவாக உள்ளது.

Rank OEM Model May’23 May’22 Y o·Y
1 Maruti Suzuki Baleno 18,733 13,970 34%
2 Maruti Suzuki Swift 17,346 14,133 23%
3 Maruti Suzuki Wagon R 16,2S8 16,814 -3%
4 Hyundai Creta 14,449 10,973 32%
5 Tata NEXON 14,423 14,614 -1%
6 Maruti Suzuki Vitara Brezza 13,398 10,312 30%
7 Maruti Suzuki Eeco 12,818 10,482 22%
8 Maruti Suzuki DZIRE 11,315 11,603 -2%
9 Tata PUNCH 11,124 10,241 9%
10 Maruti Suzuki Ertiga 10,528 12,226 -14%
11 Hyundai Venue 10,213 8,300 23%
12 Maruti Suzuki FRONX 9,863
13 Maruti Suzuki Alto 9,368 12,933 -28%
14 Mahindra Scorpio 9,318 4,348 114%
15 Maruti Suzuki Grand Vitara 8,877  –
16 Kia SONET 8,251 7,899 4%
17 Mahindra Bolero 8,170 8,767 -7°..6
18 Tata Tiago 8,133 4,561 78%
19 Toyota lnnova Crysta 7,776 2,737 184%
20 Hyundai Grand i10 6,385 9,138 -30%
21 kia CARENS 6,367 4,612 38%
22 Hyundai i20 Elite 6,094 4,463 37%
23 Tata ALTROZ 5,420 4,913 10%
24 Mahindra XUV700 5,245 5,069 3%
25 Toyota GLANZA 5,179 2,952 75%

இந்திய சந்தையில் ஹேட்ச்பேக், செடான், கார்களை விட எஸ்யூவி மாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

Exit mobile version