Automobile Tamilan

புதிய டொயோட்டா ஹைலக்ஸ் ஹைபிரிட் 48V அறிமுகம்

toyota hilux hybrid 48v

டொயோட்டா ஐரோப்பா பிரிவில் புதிய ஹைலக்ஸ் மைல்டு ஹைபிரிட் 48V பிக்கப் டிரக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரிலும் மைல்டு ஹைபிரிட் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

2.8 லிட்டர் டீசல் என்ஜினை பெறுகின்ற இந்த மாடல்களில் CO2 மாசு உமிழ்வினை கட்டுப்படுத்தும் நோக்கில் டொயோட்டா 48V ஹைபிரிட் முறையை செயல்படுத்தி வருகின்றது.

Toyota Hilux Hybrid 48V

புதிதாக ஐரோப்பா சந்தையில் புரோஏஸ் மற்றும் புரோஏஸ் சிட்டி இவி என இரு வரத்தக வேண்டுகளுடன் கூடுதலாக ஹைலக்ஸ் மைல்டு ஹைபிரிட் டெக்னாலாஜி கொண்ட மாடல் வந்துள்ளது. இந்த மாடலில் உள்ள 2.8 லிட்டர் டீசல் என்ஜின் ஹைலக்ஸ் மட்டுமல்லாமல் ஃபார்ச்சூனர், லேண்ட் க்ரூஸர் பிராடோ, மற்றும் லேண்ட் க்ரூஸர் 70 ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளது.

முழுமையான நுட்பவிபரங்களை வெளியிடவில்லை என்றாலும், டொயோட்டா 48வி ஹைபிரிட் பெற்றாலும் செயல்திறனில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது என குறிப்பிட்டுள்ளது.

ஹைலக்ஸ் ஹைபிரிட் 48V என்ஜின் மூலம் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் செயல்திறன் வழங்குவதுடன் இந்த பிக்கப் டிரக்கின் புகழ்பெற்ற ஆயுள் மற்றும் நம்பகத்தன்மையுடன், த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் மேம்படுத்தப்பட்டு மேலும், கரடுமுரடான நிலப்பரப்பில் செல்லும்போது மற்றும் கீழ்நோக்கி செல்லும் பொழுதும் ரீஜெனேரேட்டிவ் செய்யும் பிரேக்கிங் மூலம் மேம்படுத்தப்பட்ட ஆஃப்-ரோட் செயல்திறன் கொண்டது.

டிரைவிங் முறையில் தொடர்ந்து 3,500 கிலோ சுமையை இழுத்து செல்லவும் மற்றும் பேலோட் 1,000 கிலோ வரை எடுத்துச்செல்வதில் எந்த சமரசமும் இல்லாமல் உள்ளது.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹைலக்ஸ் மற்றும் ஃபார்ச்சூனர் கார்களில் மைல்டு ஹைபிரிட் 48 வோல்ட் சிஸ்டம் அடுத்த ஆண்டு பெற வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version