Automobile Tamilan

ரூ.21.40 லட்சத்தில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் GX+ அறிமுகம்

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா

டொயோட்டாவின் மிகவும் பிரசத்தி பெற்ற இன்னோவா கிரிஸ்டா எம்பிவி மாடலில் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள GX+ வேரியண்டில் 7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷனை பெற்றதாக சந்தையில் கிடைக்க துவங்கியுள்ளது.

விற்பனையில் கிடைக்கின்ற GX மற்றும் VX வேரியண்டுகளுக்கு இடையில் வெளியிடப்பட்டுள்ள GX+ வகையில் பல்வேறு கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. தற்பொழுது 2024  இன்னோவா கிரிஸ்டா விலை ரூ.19.99 லட்சம் முதல் ரூ.26.30 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

2.4 லிட்டர்  டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 148 bhp மற்றும் 343 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகளில் 7 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், வாகன நிலைப்புத்தன்மை கட்டுப்பாடு மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), எலக்ட்ரானிக் பிரேக் விநியோகம் (EBD) மற்றும் பிரேக் அசிஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

Innova Crysta GX+ 7 Seater – ₹ 21.39 லட்சம்

Innova Crysta GX+ 8 Seater – ₹ 21.44 லட்சம்

GX வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக ரியர் வியூ கேமரா, ஆட்டோ-ஃபோல்ட் மிரர், டாஷ் கேம், டயமண்ட் கட் அலாய் வீல், இன்டிரியரில் மர பேனல்கள் உடன் பிரீமியம் துணி இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

Exit mobile version