டீசல் என்ஜின் பெற்ற 2023 டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா காரின் விலை ₹ 19.99 லட்சம் முதல் துவங்கி ₹ 25.43 லட்சம் வரை நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. டாப் வேரியண்டுகளான VX மற்றும் ZX விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து டீசல் என்ஜின் கொண்ட கிரிஸ்டா விற்பனைக்கு வந்துள்ளதால், இன்னோவா ஹைக்ராஸ் காரில் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் என இரு ஆப்ஷன்களை மட்டும் பெற்றுள்ளது.

 2023 Toyota Innova Crysta price

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரில்  G, GX, VX  மற்றும் டாப் வேரியண்ட் ZX. அனைத்து வேரியண்டிலும் ஏழு அல்லது எட்டு இருக்கைகள் கொண்டவையாக கிடைக்கும். ஆனால் ZX ஏழு இருக்கைகள் மட்டுமே இருக்கும்.

புதிய 2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரில் ஓட்டுனர் இருக்கை அட்ஜெஸ்டுமென்ட், பல மண்டல காலநிலை கட்டுப்பாடு, பல வண்ணத்தில் லெதர் தோல் இருக்கைகள், சுற்றுப்புற விளக்குகள் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு ஒரு டச் டம்பிள் அம்சத்துடன் வருகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகளுடன் கூடிய 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

148 பிஎச்பி மற்றும் 343 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படவில்லை.

பாதுகாப்பு வசதிகளில் 7 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், வாகன நிலைப்புத்தன்மை கட்டுப்பாடு மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), எலக்ட்ரானிக் பிரேக் விநியோகம் (EBD) மற்றும் பிரேக் அசிஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

Variant Price
G 7 Seater Rs. 19.99 Lakhs
G 8 Seater Rs. 19.99 Lakhs
GX 7 Seater Rs. 19.99 Lakhs
GX 8 Seater Rs. 19.99 Lakhs
VX 7 Seater Rs. 23.79 Lakhs
VX 8 Seater Rs. 23.84 Lakhs
ZX 7 Seater Rs. 25.43 Lakhs