இந்தியாவில் விற்பனையில் உள்ள டொயொட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் உடன் மீண்டும் க்ரிஸ்டா டீசல் என்ஜின் கொண்ட மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. ரூ.50,000 கட்டணமாக செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

தற்போது இன்னோவா ஹைக்ராஸ் கார் பெட்ரோல் பதிப்பில் ம்பட்டும் கிடைத்து வரும் நிலையில் டீசல் என்ஜின் பெற்ற மாடல்ளுக்கு மட்டும் முந்தைய இன்னோவா க்ரிஸ்டா சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்களை பெற்று விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா

2.4 லிட்டர் டீசல் என்ஜின் பெற்றுள்ள 2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரில் 148 பிஎச்பி மற்றும் 343 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படவில்லை.

டொயோட்டா நிறுவனம் க்ரிஸ்டா காரின் முன்பக்கத்தை சிறிய அளவில் புதுப்பித்துள்ளது. முன் கிரில் மற்றும் பம்பரில் சிறிய அளவில் மாறுதல்களை கொண்டு, பனி விளக்கு மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பக்கவாட்டு தோற்றம் மற்றும் அலாய் வீல் வடிவமைப்பு அப்படியே உள்ளது.

2023 இன்னோவா க்ரிஸ்டா காரில் இப்பொழுது நான்கு வேரியண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அவை G, GX, VX  மற்றும் டாப் வேரியண்ட் ZX. அனைத்து வேரியண்டிலும் ஏழு அல்லது எட்டு இருக்கைகள் கொண்டவையாக கிடைக்கும். ஆனால் ZX ஏழு இருக்கைகள் மட்டுமே இருக்கும்.

புதிய 2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரில் ஓட்டுனர் இருக்கை அட்ஜெஸ்டுமென்ட், பல மண்டல காலநிலை கட்டுப்பாடு, பல வண்ணத்தில் லெதர் தோல் இருக்கைகள், சுற்றுப்புற விளக்குகள் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு ஒரு டச் டம்பிள் அம்சத்துடன் வருகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகளுடன் கூடிய 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

பாதுகாப்பு அம்சங்களில் 7 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், வாகன நிலைப்புத்தன்மை கட்டுப்பாடு மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), எலக்ட்ரானிக் பிரேக் விநியோகம் (EBD) மற்றும் பிரேக் அசிஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்