கியா கிளாவிஸ் எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது

kia clavis concept

கியா இந்தியா நிறுவனத்தின் அடுத்த எஸ்யூவி மாடலாக கிளாவிஸ் என்ற பெயருக்கு காப்புரிமை கோரியுள்ளதால் புதிய மாடல் 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம்.

செல்டோஸ், சொனெட் என இரு மாடல்களுக்கு கீழாக ஹூண்டாய் எக்ஸ்டர் அடிப்படையில் வரக்கூடும் அல்லது புதிய எஸ்யூவி மாடலாக இருக்கலாம்.

Kia Clavis

ICE மற்றும் எலக்ட்ரிக் என இரண்டிலும் எதிர்பார்க்கப்படுகின்ற கிளாவிசின் தோற்ற அமைப்பு லைஃப்ஸ்டைல் எஸ்யூவி போல அமைந்திருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிப்பதனால் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பெட்ரோல் என்ஜின் உட்பட ஹைபிரிட் ஆப்ஷனை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், எலக்ட்ரிக் மாடலாக வரும் பொழுது அனேகமாக 500 கிமீ ரேஞ்ச் வழங்கும் வகையிலான பேட்டரி ஆப்ஷனை பெறுவதற்காக வாய்ப்புகள் உள்ளது.

தற்பொழுது கியா கிளாவிஸ் என்ற பெயர் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதால் மற்றபடி எந்த என்ஜின் ஆப்ஷனும் உறுதியான வடிவமைப்பு தொடர்பான தகவலும் தற்பொழுது இல்லை.

இந்தியாவில் கியா நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் EV9 எலகட்ரிக் எஸ்யூவி மற்றும் கியா கார்னிவல் எம்பிவி ஆகியவற்றுடன் சொனெட் விலை அறிவிக்க உள்ளது.