கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர வசதிகளை பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான கார்னிவல் எம்பிவி ரக காரின் இன்டிரியர் படங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக வெளிப்புற தோற்றம் மற்றும் டிசைன் வெளியானது.
முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட இண்டிரியரில் 12.3 அங்குல டிஸ்பிளே கொண்டதாக அமைந்திருக்கின்றது.
2024 Kia Carnival interior
புதிய கார்னிவல் காரில் கொடுக்கப்பட்டுள்ள டாஷ்போர்டின் மத்தியில் புதிய வளைந்த அமைப்பினை கொண்ட 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டதாகவும், மாறக்கூடிய வகையிலான ஏர்கான் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் பேனல் புதிய கார்னிவலில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
பின்பக்க பயணிகளுக்கு வீடியோ மற்றும் OTT சேவைகளை ஆதரிக்கும் வகையில் 14.6 இன்ச் HD பொழுதுபோக்கு திரையை தேர்வு செய்யலாம். கியாவின் சொகுசு கார்னிவல் காரில் காற்று சுத்திகரிப்பு, கைரேகை அங்கீகார அமைப்பு, கேமராவுடன் கூடிய டிஜிட்டல் கண்ணாடி ஆகிய வசதிகள் உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட கியா கார்னிவல் காரில் 1.6-லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின், 3.5-லிட்டர் V6 பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று விதமான ஆப்ஷனை பெற உள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள கியா கார்னிவல் மாடலில் 200bhp மற்றும் 400Nm டார்க் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறக்கூடும்.