கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர வசதிகளை கொண்ட கார்னிவல் பிரீமியம் எம்பிவி காரின் புதுப்பிக்கப்பட்ட மாடல் பல்வேறு மாற்றங்களுடன் 2024 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரக்கூடும்.
2023 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த கியா KA4 கான்செப்ட்டின் அடிப்படையிலான ஸ்டைலிங் அம்சங்களை பெற்ற கார்னிவல் காரின் வெளிப்புற படம் மட்டுமே முதற்கட்டமாக வெளியாகியுள்ளது. இன்டிரியர் தொடர்பான படங்கள் தற்பொழுது வெளியிடப்படவில்லை.
2024 Kia Carnival
கியா மோட்டார்சின் பாரம்பரிய டைகர் நோஸ் கிரில் அமைப்பினை பெற்று கார்னிவல் ஹெட்லேம்ப் உடன் இணைந்த L-வடிவ பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் மிகவும் நிமிர்ந்த மூக்கைப் பெறுகிறது. கிரிலில் பல்வேறு இடங்களில் குரோம் பிட்களைப் பெறுகிறது, புதிய பம்பரில் ஏர் டேம் மற்றும் அலுமினிய ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளது.
எல் வடிவம் பெற்ற டெயில் லேம்ப்களில் எல்இடி லைட் பார் வழியாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் பின்புற பம்பர் மேட் கருப்பு மற்றும் குரோம் கலவையைப் பெறுகிறது. அலாய் வீல் வடிவமைப்பு ஆனது கியா பேட்டரி எலக்ட்ரிக் கார்களில் உள்ளதை போல அமைந்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட கியா கார்னிவல் காரில் 1.6-லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின், 3.5-லிட்டர் V6 பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று விதமான ஆப்ஷனை பெற உள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள கியா கார்னிவல் மாடலில் 200bhp மற்றும் 400Nm டார்க் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறக்கூடும்.
இந்தியாவில் கியா கார்னிவல் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.