Automobile Tamilan

வெற்றிகரமாக 50 ஆண்டுகளை கடந்த ஃபோக்ஸ்வேகன் போலோ

Volkswagen polo 50years

இந்தியர்கள் தவறவிட்ட கார்களில் ஒன்றுதான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ தற்பொழுது இந்த மாடல் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதை முன்னிட்டு சிறப்பு போல எடிசனை ஜெர்மனியில் இந்நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது.

ஸ்பெஷல் எடிசன் மாடல் ஸ்டைல் வேரியண்டின் அடிப்படையிலான  போலோவில் 16-இன்ச் ‘கோவென்ட்ரி’ அலாய் வீல்கள் (ஆப்ஷனல் 17-இன்ச் ‘டோரோசா’), அடர் நிற பின்புற ஜன்னல்கள் மற்றும் ’50’ என்ற எழுத்துடன் கூடிய B-தூணில் 3D பேட்ஜ், சிறப்பு ஆண்டுவிழா உட்புறத்தில் சில் பேனல் மோல்டிங்ஸில் ‘எடிஷன் 50′ எழுத்து மற்றும் கீழ் ஸ்டீயரிங் வீல் டிரிமில் ’50’ அத்துடன் முன் பயணிகள் பக்கத்தில் உயர்-பளபளப்பான கருப்பு டேஷ்போர்டிலும் உள்ளது.

இந்த சிறப்பு எடிசனில், 95hp, 175Nm 1-லிட்டர், மூன்று-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் எஞ்சின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் TSI 116hp, 200Nm டார்க் வெளிப்படுத்துவதுடன், DCT கியர்பாக்ஸ் மட்டும் கிடைக்கின்றது.

போலோ மாடல் இந்திய சந்தையில் போதிய வரவேற்பில்லாத காரணத்தால் நீக்கப்பட்டது.

Exit mobile version