Automobile Tamilan

கருப்பு நிறத்தை பெற்ற ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் & டைகன்

VW Taigun and Virtus dark edition

ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ தனது விர்டஸ் மற்றும் டைகன் எஸ்யூவி என இரண்டிலும் டீப் பிளாக் பேரல் நிறத்தை கொண்டதாக GT பிளஸ் வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சவுண்ட் எடிசன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது 113.42 HP மற்றும் 178 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டு விருப்பங்களுடனும் கிடைக்கிறது.

Volkswagen Virtus & Taigun

தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பல்வேறு சிறப்பு எடிசன்களை மட்டுமே அறிமுகம் செய்து வருகின்றது. குறிப்பாக டைகன் ட்ரையில் எடிசன் மற்றும் சவுண்ட் எடிசன் என இரண்டு வேரியண்ட் வழங்கப்பட்டுள்ளது.

புதிய வண்ணத்தின் பிரீமியத்தின் விலை ரூ.25,000 – 32,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

டைகன் மற்றும்  எஸ்யூவி சவுண்ட் எடிசன் மாடலில் மிக சிறப்பான ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏழு-ஸ்பீக்கர் உடன் ஆம்பிளிபையர், சப்வூஃபர் உள்ளடக்கிய மேம்பட்ட ஆடியோ அமைப்பை வழங்குகிறது. தவிர, இது ‘சவுண்ட் எடிஷன்’ பேட்ஜிங் மற்றும் சி-பில்லர் பகுதியில் கிராபிக்ஸ் உள்ளது.

Exit mobile version