இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி காரில் டாப்லைன் வேரியண்டின் அடிப்படையில் சவுண்ட் எடிசன் விலை ரூ.16.33 லட்சம் முதல் ரூ.17.90 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விர்டஸ் போல டைகன் எஸ்யூவி காரில் தோற்ற அமைப்பில் மற்றும் மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் மாற்றமும் இல்லாமல் Sound Edition பேட்ஜிங் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
Volkswagen Taigun Sound Edition
டைகன் எஸ்யூவி சவுண்ட் எடிசன் மாடலில் மிக சிறப்பான ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏழு-ஸ்பீக்கர் உடன் ஆம்பிளிபையர், சப்வூஃபர் உள்ளடக்கிய மேம்பட்ட ஆடியோ அமைப்பை வழங்குகிறது. தவிர, இது ‘சவுண்ட் எடிஷன்’ பேட்ஜிங் மற்றும் சி-பில்லர் பகுதியில் கிராபிக்ஸ் உள்ளது. பவர் மூலம் இயங்கும் முன் வரிசை இருக்கைகளைப் பெறுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த பதிப்பை ரைசிங் ப்ளூ, வைல்ட் செர்ரி ரெட், கார்பன் ஸ்டீல் கிரே மற்றும் லாவா ரெட் ஆகிய 4 நிறங்களில் வரவுள்ளது.
டைகன் எஸ்யூவி மாடலில் தொடர்ந்து 1.0-லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 114bhp பவர் மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் அல்லது 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
Vw Taigun Sound Edition:
Taigun Sound Edition Topline MT – Rs. 16.33 lakh
Taigun Sound Edition Topline AT – Rs. 17.90 lakh