Automobile Tamilan

எலைட் ஐ20 காரை வீழ்த்திய பலேனோ

மாருதி சுசூகி கார்களின் செல்வாக்கு பிரிமியம் சந்தையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எஸ் க்ராஸ் காரை தொடர்ந்து வந்த பிரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ கார் பிரிவு முதன்மையான எலைட் ஐ20 காரின் விற்பனை பெருமளவு சரிய காரணமாக அமைந்துள்ளது

baleno

எலைட் ஐ20 மட்டுமல்லாமல் ஸ்விஃப்ட் காரின் விற்பனையும் குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் விற்பனையை விட  5810 கார்களை குறைவாக விற்பனை செய்துள்ளது. இதனால் கிராண்ட் ஐ10 விற்பனை அதிகரித்துள்ளது.

இதுபற்றி முழுமையாக படிக்க ; மாருதி ஸ்விஃப்ட் காரை வீழ்த்திய கிராண்ட் ஐ10

சில நாட்களுக்கு முன்னதாக ஹூண்டாய் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில் கடந்த 15 மாதங்களில் 1.50 கார்களை விற்பனை செய்து எலைட் ஐ20 கார் புதிய சாதனையுடன் பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவில் 66 % சந்தை மதிப்பினை கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

இதுபற்றி படிக்க ; ஹூண்டாய் எலைட் ஐ20 விற்பனை சாதனை

பலேனோ கார் கடந்த நவம்பர் 2015யில் 9074 கார்களை விற்பனை செய்துள்ளது. எலைட் ஐ20 8,264 கார்க் விற்பனை ஆகியுள்ளது. கடந்த அக்டோபர் 2015யில் 11,019 கார்களை விற்பனை செய்திருந்தது.

பலேனோ காரின் விற்பனை எலைட் ஐ20 மட்டுமல்லாமல் மாருதியின் பிரபலமான காரான ஸ்விஃப்ட் காரின் விற்பனையை சரித்துள்ளது. விற்பனைக்கு வந்த ஒரு மாதத்திலே 40,000 முன்பதிவுகளை பலேனோ கார் பெற்றுள்ளது.

பலேனோ கார் எலைட் ஐ20, ஜாஸ் , போலோ போன்ற கார்களுக்கு மிகுந்த சவாலாக அமைந்துள்ளது. பலேனோ காரில் லிட்டருக்கு 27.39கிமீ மைலேஜ் தரவல்ல 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 75பிஎஸ் மற்றும் டார்க் 190 என்எம் ஆகும். நெக்ஸா டீலர்கள் வழியாக மட்டுமே மாருதி பலேனோ , சுசூகி எஸ் க்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

[envira-gallery id=”3876″]

Exit mobile version