Site icon Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 கார்கள் – டிசம்பர் 2015

கடந்த டிசம்பர் 2015 யில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த கார்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். ரெனோ க்விட் கார் பட்டியலில் நுழைந்துள்ளது.

புதிதாக சந்தைக்கு வந்த ரெனோ க்விட் கார் தற்பொழுது டாப் 10 வரிசையில் 6888 கார்களை விற்பனை செய்து பட்டியலில் 9வது இடத்தினை பிடித்துள்ளது. பலேனோ கார் கடந்த இருமாதங்களாக சிறப்பான பங்களிப்பினை அளித்து வருகின்றது.

தொடர்ந்து மாருதி ஆல்டோ 22,789 கார்களை விற்பனை செய்து பட்டியிலில் முன்னிலை வகிக்கின்றது. அதனை தொடர்ந்து மாருதி டிசையர் , வேகன் ஆர் , ஸ்விஃப்ட் போன்ற கார்கள் உள்ளன. கடந்த இருமாதங்களாகவே ஸ்விஃப்ட் விற்பனை சற்று சரிந்தே காணப்படுகின்றது.

பலேனோ காரின் வரவால் மாருதி ஸ்விஃப்ட் விற்பனை சில மாதங்களாக சரிவினை நோக்கிதான் பயனித்து வருகின்றது. ஹூண்டாய் எலைட் ஐ10 கார் 12,749 கார்கள் விற்பனை ஆகி 6 வது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த டிசம்பர் மாத விற்பனையில் 10 இடங்களில் மாருதி சுசூகி  6 இடங்களை தக்கவைத்துள்ளது.

டாப் 10 கார்களில் எஸ்யூவி தவிர்க்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version