Automobile Tamilan

மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் விற்பனை அமோகம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சொகுசு கார் சந்தையில் முதன்மையான நிறுவனமாக விளங்குகின்றது. கடந்த 9 மாதங்களில் 34% வளர்ச்சியை மெர்சிடிஸ் பென்ஸ் பதிவு செய்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் GLE எஸ்யூவி
மெர்சிடிஸ் பென்ஸ் GLE எஸ்யூவி

கடந்த ஆண்டில் மொத்தம் 10,201 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த வருடத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 10,079 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது.

2015ம் ஆண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் 15 கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் ஏஎம்ஜி , எஸ்யூவி மற்றும் செடான் கார்களும் அடங்கும். இவற்றில் இதுவரை 13 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. வரும் அக்டோபர் 14ந் தேதி 14வது மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது.

39 நகரங்களில் 89 சேவைமையங்களை கொண்டு செயல்படும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் இதுவரை 12 சேவை மையங்களை திறந்துள்ளது.

அதிகம் விற்பனையான கார்கள் CLA , C கிளாஸ் மற்றும்  E கிளாஸ் போன்ற கார்களாகும். எஸ்யூவிகளும் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது.  சமீபத்தில் மெர்சிடிஸ் மேபக் பிராண்டினை மீண்டும் இந்திய சந்தையில் சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்துள்ளது.

Mercedes-Benz Sells 10,079 Units In First 9 Months Of 2015 

Exit mobile version