Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 எஸ்யூவி கார்கள் – அக்டோபர் 2015

கடந்த அக்டோபர் மாதம் விற்பனையில் சிறந்து விளங்கி டாப் 10 எஸ்யூவி கார்களை பற்றி பார்க்கலாம். டியூவி300 எஸ்யூவி சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
c382e mahindra2bthar
பொலேரோ எஸ்யூவி 7754 கார்களை விற்பனை செய்து முதலிடத்தினை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து க்ரெட்டா இரண்டாமிடத்தில் உள்ளது. ஈக்கோஸ்போர்ட் காருக்கு போட்டியாக விற்பனைக்கு வந்த டியூவி300 நான்காமிடத்தில் உள்ளது.
கடந்த இரு மாதங்களாக விற்பனையில் டியூவி300 மற்றும் பொலிரோ கார்கள் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்த எஸ் க்ராஸ் கிராஸ்ஓவர் ரக மாடல் 3017 கார்களை விற்பனை செய்துள்ளது.

பிரிமியம் எஸ்யூவி 

ஃபார்ச்சூனர் எஸ்யூவி பிரிமியம் சந்தையில் மிக வலுவான இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து பஜீரோ மற்றும் சிஆர்-வி உள்ளது. புதிதாக விற்பனைக்கு வந்த ட்ரையல் பிளேசர் 74 கார்களை விற்பனை செய்துள்ளது.
Exit mobile version