விற்பனையில் டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2016

கடந்த ஏப்ரல் மாதம் கார் விற்பனையில் முன்னனி வகித்த டாப் 10 கார்களை எவை என்பதனை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். முதலிடத்தில் வழக்கம்போல மாருதி ஆல்ட்டோ 800 கார் உள்ளது.

மாருதி ஆல்ட்டோ 800 கார் விற்பனையில் முன்னனி வகித்தாலும் தொடர்ச்சியாக 4 மாதங்களாகவே விற்பனை சரிந்தே கானப்படுகின்றது. 16, 583 கார்களை மாருதி ஆல்ட்டோ 800 விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஏப்ரல் 2015யை விட 23 % சரிவினை சந்தித்துள்ளது.

ரெனோ நிறுவனத்தின் க்விட் கார் இமாலய வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 9795 கார்களை விற்பனை செய்து ரெனோ க்விட் 6வது இடத்தினை பெற்றுள்ளது. செலிரியோ காரின் விற்பனை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகின்றது.

முதல் 10 இடங்களில் மாருதி சுஸூகி நிறுவனம் 6 இடங்களை பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 , கிராண்ட் ஐ10 கார்களை தொடர்ந்து பட்டியலில் க்ரெட்டா எஸ்யூவி 10வது இடத்தில் உள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் விலை பட்டியல் – ஏப்ரல் 2016

வ. எண்                   கார் மாடல் விபரம்          ஏப்ரல்  – 2016
1         மாருதி சுஸூகி ஆல்ட்டோ   16,583
2         மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்   15,661
3         மாருதி சுஸூகி வேகன்ஆர்   15,323
4         மாருதி சுஸூகி டிசையர்   13,256
5         ஹூண்டாய் கிராண்ட் ஐ10    9,840
6         ரெனோ க்விட்    9,795
7         ஹூண்டாய் எலைட் ஐ20    9,562
8          மாருதி சுஸூகி பலேனோ    9,400
9          மாருதி சுஸூகி செலிரியோ    8,548
10          ஹூண்டாய் க்ரெட்டா     7900

Exit mobile version