Site icon Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் ஜூன் 2016

கடந்த ஜூன், 2016 மாதந்திர விற்பனையில் முன்னனி வகித்த டாப் 10 ஸ்கூட்டர்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். ஹோண்டா ஆக்டிவா , டிவிஎஸ் ஜூபிடர்  , டியோ மற்றும் மேஸ்ட்ரோ போன்ற ஸ்கூட்டர்கள் முன்னிலை வகிக்கின்றது.

முன்னிலை வகிக்கும் ஹோண்டா ஆக்டிவா தொடர்ச்சியாக 6 மாதங்களாக முன்னிலை வகித்து இந்தியாவின் முத்மையான இருசக்கர வாகனம் என்ற பெருமையை பெற்று விளங்குகின்றது. போட்டியாளர்களான மற்ற ஸ்கூட்டர்கள் அனைத்தும் 50,000 எண்ணிக்கையை கூட பதிவு செய்யாத நிலையில் ஆக்டிவா ஸ்கூட்டர் 2,26,686 விற்பனை ஆகி கடந்த ஜூன் மாத விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஹீரோ நிறுவனத்தின் மேஸ்ட்ரோ , டூயட் , பிளஸர் போன்ற ஸ்கூட்டர்களும் பட்டியலில் உள்ளது. இதுதவிர டிவிஎஸ் ஜூபிடர் இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்தில் ஹோண்டா டியோ மற்றும் 6 வது , 8வது இடங்களை யமஹா பேசினோ மற்றும் ரே பிடித்துள்ளது. சுசூகி ஆக்செஸ் 7 வது இடத்திலும் ஹோண்டா ஏவியேட்டர் பத்தாவது இடத்திலும் உள்ளது.

முழுமையான பட்டியலை காண கீழுள்ள அட்டவனையில் பார்க்கலாம்.

automobiletamilan.com

டாப் 10 ஸ்கூட்டர்கள் ஜூன் 2016

 வ.எண்  மாடல் விபரம்   ஜூன் 2016
1. ஹோண்டா ஆக்டிவா  2,36,639
2. டிவிஎஸ் ஜூபிடர் 46,145
3. ஹோண்டா டியோ 26,428
4. ஹீரோ மேஸ்ட்ரோ 24,281
5. ஹீரோ டூயட் 24,017
6. யமஹா பேசினோ 18,415
7.  சுசூகி ஆக்செஸ் 14,928
8. யமஹா ரே 13,367
9.  ஹீரோ பிளஸர் 12,226
10. ஹோண்டா ஏவியேட்டர் 7,467

Exit mobile version