ஸ்கார்பியோவை வீழ்த்திய டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காருக்கு அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. பல வருடங்களாக எஸ்யூவி சந்தையில் முன்னிலை வகித்து வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியை மார்ச் மாத விற்பனையில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

ரெனோ டஸ்ட்டர் மார்ச் மாதத்தில் 6300 கார்களை விற்றுள்ளது.இது ரெனோ நிறுவனத்தின் விற்பனையில் 80% பங்கினை டஸ்ட்டர் வகிக்கின்றது. இதே மாதத்தில் ஸ்கார்பியோ 4700 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ

எஸ்யூவி சந்தையில் ஸ்கார்பியோதான் முதன்மை காராக விளங்கி வந்தது என்பது குறிப்பிடதக்கதாகும். 11 வருடங்களுக்கு மேலாக விற்பனையில் உள்ள ஸ்கார்பியோவிற்க்கு இது சரிவு காலமாகும்.

மேலும் விரைவில் வெளிவரவுள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், நிசான் டஸ்ட்டர் போன்றவை ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஸ்கார்பியோவிற்க்கு மிகுந்த சவாலை ஏற்ப்படுத்தும்.

மஹிந்திரா ஸ்கார்பியோவை புதுப்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எஸ்யூவி கார்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளதால் தன்னுடைய கார்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ்யை குறைக்க திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தை எஸ்யூவி பிரிவில் வீழ்த்துவது சாதரனமாக நடக்க கூடியதல்ல…

இந்த செய்தி பிசினஸ் ஸ்டான்டர்டு கட்டுரை அடிப்படையாக கொண்டதாகும்.

thanks to Business-standard

Exit mobile version