ஹோண்டா அமேஸ் டீசல் கார் – விறுவிறுப்பான முன்பதிவு

ஹோண்டா அமேஸ் காரினை ஹோண்டா கடந்த வாரம் அறிமுகம் செய்தது. ஹோண்டா அமேஸ் காருக்கு மிக சிறப்பான வரவேற்பினை பெற்று வருவதனை முன்பதிவு மூலம் உறுதி செய்துள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் முதல் டீசல் காராக வெளிவந்துள்ள அமேஸ் காருக்கு முன்பதிவு 8000 த்தை நெருங்கிவிட்டதாம் இதனால் முன்பதிவு செய்தவர்களுக்கும் அமேஸ் செடான் கார் காலதாமதாமாக தான் கிடைக்கும்.

ஹோண்டா அமேஸ்

மாதம் 4000-5000 அமேஸ் கார்களை விற்பனை செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. தற்பொழுதைய ஹோண்டா ஆலையின் உற்பத்தி செய்யக்கூடிய அமேஸ் கார் திறனும் மாதம் 5000 மட்டுமே. எனவே 2013-2014 ஆம் நிதி ஆண்டில் 50000 கார்களை விற்பனை செய்வதற்க்காக திட்டமிட்டுள்ளது.

தற்பொழுது ஹோண்டா இந்தியாவின் உற்பத்தி திறன் அனைத்து கார்களையும் சேர்த்து 1.2 லட்சமாகும். இதனை இரட்டிப்பாக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு 2.4 லட்சம் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்க்காக ரூ 2400 கோடியை மூதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் இன்னும் சில மாதங்களில் உற்பத்தி தொடங்க உள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அடுத்த தலைமுறை ஹோண்டா ஜாஸ்  வெளிவரும்.

ஹோண்டா அமேஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்ற கார்களான சிட்டி, பிரியோ, ஜாஸ் கார்களுக்கும் விரிவுப்படுத்தப்படலாம். 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் தயாரிக்கவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

மேலும் ஹோண்டா பிரியோ பிளாட்ஃபாரத்திலே எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாம். எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்கள் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம்.

ஹோண்டா அமேஸ் பற்றி வெளிவந்த அனைத்து பதிவுகளும் வாசிக்க கீழே சொடுக்கவும்.

Exit mobile version