Automobile Tamilan

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

bmw f 450 gs production begins

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு கூட்டணியில் அடுத்த மாடலாக EICMA 2025ல் வெளியான பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் பைக்கின் உற்பத்தியை, தமிழ்நாட்டில் ஓசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த இரு கூட்டணியில் தயாரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ பைக்குகளின் உற்பத்தி எண்ணிக்கை 2,00,000 கடந்துள்ளது.

இத்தாலியில் நடைபெற்ற EICMA 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட BMW F 450 GS, இப்போது முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.

2013யில் தொடங்கிய இந்த TVS-BMW கூட்டணி, இதுவரை 2,00,000 யூனிட்டுகளை உற்பத்தி செய்துள்ளது. ஏற்கனவே 310cc பிளாட்ஃபாரத்தில் பிரபலமான பிஎம்டபிள்யூ G 310 R, G 310 GS மற்றும் G 310 RR ஆகிய மாடல்கள் இந்த கூட்டணியின் வெற்றியை பறைசாற்றுகின்றன. இந்த பைக்குகள் இந்தியா மட்டுமல்ல சுமார் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது இந்தியாவின் உற்பத்தி தரத்துக்கான பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

உற்பத்தி துவங்கியுள்ளதால்  420cc லிக்யூடு கூல்டு parallel-twin என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8,750 rpmல் பவர் 48 bhp மற்றும் 6,750 rpmல் 42 Nm டார்க் வழங்கும் புதிய எஃப் 450 ஜிஎஸ் மாடல் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி 2026 முதல் இந்திய சந்தையில் சுமார் ரூ.4.50 லட்சத்துக்கும் கூடுதலான விலையில் கிடைக்க உள்ளது.

Exit mobile version