கடந்த ஜனவரி மாதந்திர விற்பனையில் முன்னிலை வகித்த டாப் 10 செடான் கார்களை எவை என்பதனை இந்த பட்டியலில் தெரிந்துகொள்ளலாம். மாருதியின் டிஸையர் செடான் 18,088 என்ற எண்ணிக்கையை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது.
காம்பேக்ட் ரக செடான் பிரிவில் முன்னிலை வகிக்கின்ற டிசையர் காரை தொடர்ந்து இதே பிரிவில் இடம் பெற்றுள்ள ஹோண்டா அமேஸ் 4வது இடத்திலும் எக்ஸ்சென்ட் 5வது இடத்திலும் , செஸ்ட் , ஆஸ்பயர் , எட்டியோஸ் மற்றும் அமியோ கார்கள் வரிசை முறைப்படி 6,7 ,8 மற்றும் 9 போன்ற இடங்களை பிடித்துள்ளது.
அதனை தொடர்ந்து உள்ள மேம்பட்ட ரக செடான்களான சியாஸ் , சிட்டி மற்றும் ரேபிட் கார்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
டாப் 10 செடான் கார்கள் – ஜனவரி 2017
| வ.எண் | மாடல்கள் விபரம் | ஜனவரி 2017 |
| 1. | மாருதி சுஸூகி டிசையர் | 18,088 |
| 2. | மாருதி சுஸூகி சியாஸ் | 6,530 |
| 3. | ஹோண்டா சிட்டி | 6,355 |
| 4. | ஹோண்டா அமேஸ் | 3,911 |
| 5. | ஹூண்டாய் எக்ஸ்சென்ட் | 3,351 |
| 6. | டாடா ஸெஸ்ட் | 2,615 |
| 7. | ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் | 2,470 |
| 8. | டொயோட்டா எட்டியோஸ் | 2,189 |
| 9. | ஃபோக்ஸ்வேகன் அமியோ | 1,911 |
| 10. | ஸ்கோடா ரேபிட் | 959 |