2017 முதல் டொயோட்டா கார்கள் விலை 3 % உயர்கின்றது

வருகின்ற ஜனவரி 2017 முதல் டொயோட்டா கார்கள் விலை 3 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக டொயோட்டா கிரிலோஷ்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது. உற்பத்தி செலவு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் விலை உயர்வினை டொயோட்டா அறிவித்துள்ளது.

தரத்தில் எவ்விதமான சமரசமும் செய்துகொள்ளாத டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் ரூ.5.50 லட்சம் முதல் ரூ.1.40 கோடி வரையிலான விலையில் 9 கார் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. டொயோட்டா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கார்களாக இன்னோவா க்ரீஸ்டா , ஃபார்ச்சூனர் , கரோல்லா அல்டிஸ்  , பிளாட்டினம் எட்டியோஸ் , எட்டியோஸ் லிவா , எட்டியோஸ் க்ராஸ்  , கேம்ரி , லேண்ட் க்ரூஸர் பிராடோ மற்றும் லேன்ட் க்ரூஸர் எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

விலை உயர்வு குறித்து டொயோட்டா கிரிலோஷ்கர் இயக்குனர் மற்றும் மூத்த துணைத் தலைவர், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரி N. ராஜா தெரிவிக்கையில் கடந்த 6 மாதங்களாகவே ஸ்டீல் காப்பர் ,அலுமினியம் மற்றும் ரப்பர் போன்ற மூலப் பொருட்களின் விலை உயர்வினால் அதனை ஈடுகட்ட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக சரிவினை சந்திப்பதனால் விலை உயர்வு மிகவும் அவசியமாகின்றது என தெரிவித்துள்ளார்.

Remember December Campaign

மேலும் Remember December Campaign என்ற பெயரில் சிறப்பு மாதந்திர கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.இதில் காரினை இப்பொழுது பெற்று கொண்டு மாத தவனையை மார்ச் 2017 முதல் செலுத்தலாம். இன்னோவா க்ரீஸ்டா கார்களின் சில குறிப்பிட்ட வேரியன்ட்களுக்கு இஎம்ஐ ரூ.22,999 ஆகும்.

ரூ.500 , 1000 செல்லாத அறிவிப்பினை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு சலுகையாக கேஷ்லெஸ் பேமெனட் மற்றும் மாற்றுவழிகளில் வாடிக்கையாளர்கள் கார்களை பெற்றுக்கொள்ள முடியும். டொயோட்டா அறிவித்துள்ள 3 சதவீத விலை உயர்வு ஜனவரி 1, 2017 முதல் அமலுக்கு வருகின்றது. மேலும் பல கார் தயாரிப்பாளர்கள் விரைவில் விலை உயர்வினை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version