Site icon Automobile Tamilan

44,000 முன்பதிவுகள் , 2 மாதம் காத்திருப்பு – 2017 மாருதி டிஸையர்

கடந்த மே 16ந் தேதி ரூ.5.45 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட 2017 மாருதி டிஸையர் கார் மே 5 முதல் முன்பதிவு நடந்து வருகின்ற நிலையில் தற்பொழுது 44,000 டிஸையர் காருக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

2017 மாருதி டிஸையர்

விற்பனைக்கு வந்துள்ள மூன்றாம் தலைமுறை மாருதி டிசையர் கார் பல்வேறு வகையில் மேம்பாடு செய்யப்பட்டு சிறப்பான இன்டிரியர் மற்றும் மேம்படுத்தப்பட்ட கையாளுமை பெற்றிருப்பதுடன் கூடுதலான மைலேஜ் வெளிப்படுத்தும் வகையில், முந்தைய எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் சந்தைக்கு வந்துள்ளது.

கடந்த 18 நாட்களாக முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 2017 டிசையர்காருக்கு இரண்டு மாதங்கள் வரை காத்திருப்பு காலம் அதிகரித்து 44,000 கார்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அறிமுகத்தின் பொழுது வெளியிட்ட தகவலின் படி 33,000 முன்பதிவுகளாக இருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.

டிசையர் கார் vs போட்டியாளர்கள் பற்றி படிக்க

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

மேலும் படிங்க –> மாருதி டிசையர் மைலேஜ் விபரம் இங்கே..!

டிசையர் விலை பட்டியல்
வேரியன்ட் பெட்ரோல் டீசல்
LXi ரூ.5.45,000 ரூ.6,45,000
VXi ரூ.6,29,000 ரூ.7,29,000
ZXi ரூ.7,05,000 ரூ.8,05,000
ZXi+ ரூ.7,94,000  ரூ.8,94,000
VXi AMT ரூ.6,76,000 ரூ.7,76,000
ZXi AMT ரூ.7,52,000 ரூ.8,52,000
ZXi+ AMT ரூ.8,41,000 ரூ.9,41,000

எக்ஸ்-ஷோரூம் டெல்லி

முழுமையான பட தொகுப்பை காண மோட்டார் டாக்கீஸ் – டிசையர்

Exit mobile version