Automobile Tamilan

புதிய க்ரெட்டா ஒரு லட்சம் விற்பனை சாதனையை எட்டியது..!

Hyundai Creta on road price in tamil nadu,

நடுத்தர எஸ்யூவி சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற க்ரெட்டா எஸ்யூவி ஆனது விற்பனைக்கு வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் ஆனது மிக குறைவான காலத்திலேயே ஒரு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது.

கடந்த ஜனவரி 2024ல் வெளியிடப்பட்ட புதிய க்ரெட்டா மாடல் ஆனது பல்வேறு மேம்பாடுகளுடன் அதிநவீன வசதிகளான ADAS பாதுகாப்பு தொகுப்பினையும் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டது.

மாதந்தோறும் சுமார் 15,000க்கும் கூடுதலான விற்பனையை பதிவு செய்து வருகின்றது. விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஆறு மாதங்களுக்குள் ஒரு லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. குறிப்பாக இந்த மாடல் கடந்த மார்ச் மாதம் அதிகபட்சமாக 16,293 ஆக பதிவு செய்துள்ளது. தற்பொழுது இந்த காருக்கான காத்திருப்பு காலம் பத்து வாரங்கள் வரை உள்ளது.

மேலும் நடப்பு ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் கிரெட்டா அடிப்படையிலான புதிய எலக்ட்ரிக் காரை கொண்ட இந்நிறுவனம் விற்பனைக்கு வெளியிட உள்ளது இந்த மாடல் விலை ரூபாய் 18 லட்சத்திற்குள் துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

Exit mobile version