Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு 40 % ஜிஎஸ்டி வரி விதிப்பு..!

2025 Royal Enfield hunter 350

350cc-க்கு மேற்பட்ட என்ஜின் பெற்ற இரு சக்கர வாகனங்களுக்கு 40 % வரியை உறுதிப்படுத்தியுள்ள இந்திய அரசின் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பால் பெரும்பாலான மக்கள் வாங்கும் இருசக்கர வாகனங்களுக்கு 18% ஆக குறைக்கப்பட்டாலும், இந்தியாவின் பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு, கேடிஎம், டிரையம்ப், ஹார்லி-டேவிட்சன் என பல பிரீமியம் நிறுவனங்கள் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

350ccக்கு மேற்பட்ட என்ஜின் பெற்ற இரு சக்கர வாகனங்களுக்கு 28 % + 3% செஸ் என 31% வரி வசூலிக்கப்படும் நிலையில், செப்டம்பர் 22 முதல் 40 % ஆக வரி விதிக்கப்பட உள்ளது. குறிப்பாக இந்த வரி ஆடம்பர பொருட்களாக கருதப்படுகின்றது.

ராயல் என்ஃபீல்டின் 350சிசி வரிசையில் உள்ள மாடல்களில் 349cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால் எந்த பாதிப்பும் ஏற்படாது மாறாக விலை குறையும், காரணம் 18 % வரி விதிப்பில் வந்துவிடும், ஆனால் 450cc வரிசை மற்றும் 650cc வரிசை என இரண்டும் 40 % வரிக்கு மாறிவிடும்.

குறிப்பாக, இதில் மிகவும் பாதிக்கப்பட போவது பஜாஜின் கேடிஎம், டிரையம்ப் மூலம் தயாரிக்கப்படுகின்ற டியூக் 390, ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400 போன்றவை பல்சர் 400 ஆகியவை விலை உயரக்கூடும்.

ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் தயாரிக்கப்படுகின்ற மாடல்கள் விலை உயர்வதுடன், டூகாட்டி, டிரையம்ப் பிரீமியம் பைக்குகள் என பல நிறுவனங்களின் மாடல்கள் விலை அதிகரிக்கலமாம்.

ஏற்கனவே, ஐஷர் மற்றும் ராயல் என்ஃபீல்டு தலைவர் சித்தார்த் லால் வெளியிட்ட அறிக்கையில் 350ccக்கு மேற்பட்ட இந்திய ஆட்டோமொபைல் சந்தை வெறும் 1 % பங்களிப்பை மட்டுமே பெற்றுள்ளதால் 18 % வரிக்குள் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும், குறிப்பாக ஏற்றுமதிக்கு சிறப்பானதாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

Exit mobile version