Automobile Tamil

கூகுள் வழியில் ஆப்பிள் கார் தயாரிக்கும் திட்டம்..!

மோட்டார் மற்றும் டெக் நிறுவனங்களின் அடுத்த அதிரடி திட்டமாக விளங்க உள்ள தானியங்கி கார் திட்டத்திற்கான செயல்பாட்டில் ஆப்பிள் கார் தயாரிக்கப்படுமா ? என்ற கேள்விக்கு ஆப்பிள் தலைமை செயல்அதிகாரி டிம் குக் பதில் அளித்துள்ளார்.

 

ஆப்பிள் கார்

ஆட்டோமொபைல் தயாரிப்புகளின் அடுத்தகட்ட நகர்வுகள் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான வாகனங்கள் மற்றும் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தானியங்கி கார் தயாரிப்பு போன்றவையே மிக முக்கியமானதாக அமைய உள்ளது.

முதன்முதலாக கூகுள் நிறுவனம் தானியங்கி கார் தொடர்பான ஆய்வு பணிகளில் ஈடுபட்டு மற்ற நிறுவனங்களை விட முன்னணியாக வேமோ தானியங்கி கார் நுட்பத்தினை செயல்படுத்தி வருகின்றது. இதுதவிர ஊபேர் மற்றும் லிஃப்ட் உள்பட பல்வேறு ஆட்டோமொபைல் வாகன தயாரிப்பாளர்களும் தானியங்கி கார் நுட்பம் தொடர்பான செயல்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது.

சமீபத்தில் ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்த ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறுகையில் முதல்முறையாக ஆப்பிள் ஆட்டோமொபைல் நுட்பம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.வாகன துறையில் ஆப்பிள் நிறுவனம் நேரடியான கார் தயாரிப்பில் ஈடுபடாமல் தானியங்கி கார்களுக்கு தேவையான அடிப்படை நுட்பமான செயற்கை நுண்ணறிவு அமைப்பிற்கு தாயாக செயல்பட (mother of all AI -artificial intelligence ) திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துளார். மேலும் அவர் கூறுகையில் ஏஐ (AI) நுட்பங்கள் மிக கடுமையானதாக இருக்கும், எனவும் கூறியுள்ளார்.

தானியங்கி கார் தயாரிப்பு நுட்பத்தில் தீவர ஆர்வம் காட்டி வருகின்ற கூகுள் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் கீழ் செயல்படுகின்ற வேமோ சமீபத்தில் 500 க்கு மேற்பட்ட ஃபியட் கிறைஸலர் நிறுவனத்தின் பசுஃபிகா வேன்களில் சோதனை செய்து வருகின்றது. சமீபத்தில் ஜிஎம் நிறுவனமும் 130 தானியங்கி போல்ட்ஸ் கார்களை தயாரித்துள்ள நிலையில் இவைகளும் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் நேரடியாக கார் தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிம் குக் தந்துள்ள பதில் பலருக்கு ஏமாற்றத்தை தந்திருக்கலாம்.

Exit mobile version