Automobile Tamilan

நவம்பர் 2023ல் அசோக் லேலண்ட் டிரக் விற்பனை 3 % சரிவு

Ashok leyland ecomet star 1915 truck

நவம்பர் 2023 மாதாந்திர  முடிவில் அசோக் லேலண்ட் நிறுவனம் 14,053 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்து ஆண்டு இதே மாதம் 14,561 யூனிட்டுகளாக பதிவு செய்திருந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த விற்பனை சரிவு 3 சதவிகிதம் ஆகும்.

Ashok Leyland Sales Report November 2023

அசோக் லேலண்ட், தனது வணிக வாகனங்களுக்கான மொத்த உள்நாட்டு மொத்த விற்பனை நவம்பர் 2023ல் 13,031 யூனிட் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 13,645 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 5% குறைந்துள்ளது.

நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை பிரிவில், 2023 நவம்பரில் உள்நாட்டு மற்றும் வெளிநாடு விற்பனை 10 சதவீதம் சரிந்து 8,500 யூனிட்களை பதிவு செய்துள்ளது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 9,474 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

அடுத்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்ட மொத்த இலகுரக வாகனங்களின் எண்ணிக்கை, 2022 நவம்பரில் விற்பனை செய்யப்பட்ட 5,087 யூனிட்களிலிருந்து, இந்த ஆண்டு நவம்பரில் 9 சதவீதம் அதிகரித்து 5,553 ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version