ஆகஸ்ட் 2019-யில் விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்

Hero Splendor iSmart

இந்தியாவின் ஆட்டோமொபைல் வாகன துறை கடுமையான வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில், 2019 ஆகஸ்ட் மாதம் விற்பனையில் முதல் 10 இடங்களை பெற்ற இரு சக்கர வாகனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விளங்குகின்றது.

சுசுகி இரு சக்கர வாகன நிறுவனத்தை தவிர மற்ற அனைத்து இரு சக்கர வாகன தயாரிப்பாளரின் விற்பனை எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது. ஹீரோ ஸ்பிளென்டர் மற்றும் ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கையிலும் வீழ்ச்சி இருந்த பொழுதும் தொடர்ந்து 2 லட்சத்துக்கு அதிகமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.

முழுமையான விற்பனை பட்டியலை கீழே அறிந்து கொள்ளலாம்..

விற்பனையில் டாப் 10 டூ வீலர்கள் – ஆகஸ்ட் 2019

வ.எண் தயாரிப்பாளர் ஆகஸ்ட் 2019
1. ஹோண்டா ஆக்டிவா 2,34,279
2. ஹீரோ ஸ்பிளென்டர் 2,12,839
3. ஹீரோ HF டீலக்ஸ் 1,60,684
4. ஹோண்டா சிபி ஷைன் 87,434
5. ஹீரோ கிளாமர் 70,562
6. பஜாஜ் பல்ஸர் 60,706
7. டிவிஎஸ் ஜூபிடர் 57,849
8. டிவிஎஸ் XL சூப்பர் 55,812
9. சுசூகி ஆக்செஸ் 48,646
10. பஜாஜ் பிளாட்டினா 44,774

 

Exit mobile version