இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை 2017 மார்ச் மாத முடிவில் 8 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் 2,44,235 பைக்குகளை பஜாஜ் விற்பனை செய்துள்ளது.
பஜாஜ் நிறுவனம் இந்தியா மற்றும் ஏற்றுமதி சந்தை உள்பட சுமார் 2,44,235 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பீடுகையில் 8 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த மாரச் 2016ல் 2,64,249 பைக்குகள் விற்பனை செய்யபட்டுள்ளன.
உள்நாட்டு சந்தையில் மட்டுமே வீழ்ச்சி கண்டுள்ள விற்பனை ஏற்றுமதி சந்தையில் சிறப்பான பங்களிப்பினை பெற்று 8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. பல்சர் , டிஸ்கவர் , வி வரிசை பைக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சமீபத்தில் பஜாஜ் பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள் டோமினார் 400 பைக் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் மாடலுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
விபரம் | மார்ச் 2017 | மார்ச் 2016 | வளர்ச்சி |
---|---|---|---|
உள்நாடு | 1,51,449 | 1,76,788 | -14% |
ஏற்றுமதி | 92786 | 87461 | 6% |
மொத்தம் | 2,44,235 | 2,64,249 | -8% |