ஜனவரி 24.., பஜாஜ்-ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் கூட்டணி விபரம்

Triumph-Bajaj-logo

பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனமும் இணைந்து வளரும் சந்தைக்கு ஏற்ற நடுத்தர பிரிவு மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. குறிப்பாக 300-500 சிசி வரையிலான சந்தையில் புதிய மாடல்களை உருவாக்க உள்ளது.

ஜனவரி 24, 2020-ல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை அறிவித்துள்ள இந்த புதிய கூட்டணியில் முக்கிய அம்சமாக ட்ரையம்ப மோட்டார்சைக்கிள் தயாரிக்கவும், பஜாஜ் அதனை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டணியின் முதல் மோட்டார்சைக்கிள் ட்ரையம்ப பிராண்டில் முதற்கட்டமாக விற்பனைக்கு 2021 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கலாம்.

இந்த பைக்குள் உள்நாட்டில் மட்டும்ல்ல பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. பஜாஜ் மற்றும் கேடிஎம் இணைந்து செயல்படுவது போல இந்த கூட்டணியும் உருவாக உள்ளது.

குறிப்பாக பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணியின் முழுமையான நோக்கமே ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு சவால் விடுக்கும் வகையிலான மாடல்களை உற்பத்தி செய்வதே ஆகும்.

Exit mobile version