Site icon Automobile Tamilan

அடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு

அடுத்த 3-5 ஆண்டுகளில் சென்னையில் உள்ள புதிய தொழிற்சாலையில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று பெரியளவிலான டயர் தயாரிப்பு நிறுவனமான சியெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, வரும் 2019ம் ஆண்டில் இந்த தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிஜி எண்டர்பிரைஸ் நிறுவன நிறுவனம் ஏற்கனவே இந்த திட்டத்திற்கு 163 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தொடங்கப்பட உள்ள இந்த தொழிற்சாலைக்காக தோராயமாக 2 ஆயிரம் கோடி ரூபாயை அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் செலவிட உள்ளதாக, சியெட் நிறுவனம் வெளியிட்ட 2017-18ம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த தொழிற்சாலைக்காக கட்டிட வேலை துவக்கப்பட்டு, அடுத்த 12 மாதங்களில் தயாரிப்பு பணிகளை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சியெட் நிறுவனம், துவக்கத்தில் நாள் ஒன்றுக்கு 205 டன் பயணிகள் கார் ரேடியல் டயர்களை தயாரிக்கும் வகையில் தொழிற்சாலையை உருவாக்க உள்ளது. மேலும் டயர்களை ஏற்றுமதி செய்யும் வசதியையும் இந்த தொழிற்சாலையில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்த நிறுவனம், தனது தயாரிப்பான டயர்களை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

சியெட் நிறுவன தயாரிப்பு தொழிற்சாலைகள் பாண்டுப், மும்பை, நாசிக், ஹாலோல் மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இது தவிர, மகாராஷ்டிராவின் அம்பர்நாதில் உள்ள ஒரு நெடுஞ்சாலை டயர் உற்பத்தி தொழிற்சாலையை உள்ளது.

உள்நாட்டிலேயே தங்கள் தயாரிப்புகளை செய்து வரும் சியெட் நிறுவனம், மீதமுள்ள தயாரிப்புகளை அவுட்சோர்ஸிங் பார்ட்னர்களிடமிருந்து, மாற்று-செலவு அடிப்படையில் மற்றும் வாங்கி விற்பனை செய்யும் அடிப்படையிலுமே செய்து வருகிறது. .

இலங்கையில் தனியார் நிறுவனத்துடன் 50:50 என்ற கணக்கில் இணைந்து சியெட் களனி ஹோல்டிங்ஸ் கம்பெனி என்ற பெயரில் இயங்கி வருகிறது.

உள்ளூர் மார்க்கெட்டில் இந்த நிறுவனம் 4,500க்கும் மேற்பட்ட டீலர்கள் மற்றும் 30,000 சப்-டீலர்களையும் கொண்டுள்ளது.

Exit mobile version