Automobile Tamilan

டெக் மையத்தை ஜெர்மனியில் திறந்த ஹீரோ மோட்டோகார்ப்

69799 hero

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெக் மையம் ஜெர்மனியில் உள்ள முனிச் அருகே திறக்கப்பட்டுள்ளது. Hero Tech Center Germany GmbH என பெயரிடப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவை தவிர்த்த மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ஜெர்மனி நாட்டில் உள்ள முனிச் நகரின் அருகாமையில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் ஹோண்டா நிறுவனம் பிரிந்த பின்னர், தொழிற்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளுக்கான Center of Innovation and Technology (CIT) மையத்தை 2016 ஆம் ஆண்டில் ஜெயப்பூரில் தொடங்கியது.

இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200, எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T உள்ளிட்ட மாடல்கள் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்து வரவுள்ள பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு என தொடங்கப்பட்டுள்ள ஹீரோ டெக் மையத்தின் தலைமை அதிகாரியாக டெக்னாலஜி அதிகாரி மார்கஸ் நிர்வகிப்பார்.

இந்த மையத்தில் வரவுள்ள பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள் மாடல்கள் மற்றும் டாக்கர் ரேலிக்கான ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் டீம் ரேலி மாடல்களை உற்பத்தி செய்ய மற்றும் நுட்பம் சார்ந்த மேம்பாடுகளை வழங்க இந்த மையம் செயற்படுத்தப்பட உள்ளது.

Exit mobile version