எக்ஸைட் எனர்ஜி LFP பேட்டரியை பயன்படுத்த ஹூண்டாய் மற்றும் கியா ஒப்பந்தம்

Hyundai and Kia partner Exide Energy

இந்தியாவின் முன்னணி LFP பேட்டரி தயாரிப்பாராளன எக்ஸைட் எனர்ஜி உடன் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் ஹூண்டாய் மற்றும் கியா இடையே பேட்டரிகளை பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் Namyang ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹூண்டாய் மோட்டார் R&D தலைவர் Heui Won Yang மற்றும் கியா R&D பிரிவின் தலைவர்  Chang Hwan Kim மற்றும்  Duk Gyo Jeong, Electrification Energy Solutions Tech தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். எலெக்ட்ரிக் வாகன உதிரிபாகங்கள் துணைப் பிரிவு மற்றும் xide எனர்ஜியின் CEO டாக்டர் மந்தர் வி டியோ ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தியாவின் முதன்மையான லெட் ஆசிட் பேட்டரி தயாரிப்பாளராகவும் 75 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ள நிறுவனம் எக்ஸைட் எனர்ஜி சொல்யூஷன்ஸ் என்பது எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸின் கீழ் செயல்படும் துணை நிறுவனமாகும், இது 2022ல் லித்தியம்-அயன் செல்கள், தொகுதிகள் மற்றும் பல வேதியியல் மற்றும் வடிவ காரணிகளின் போர்ட்ஃபோலியோவை உள்ளடக்கிய பேக்குகளை உற்பத்தி செய்யும் வணிகத்தில் இறங்கியது.

கியா மற்றும் ஹூண்டாய் இரு நிறுவனங்களும் பேட்டரி வாகன தயாரிப்பில் மிக தீவரமாக செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள எலக்ட்ரிக் கார்களுக்கு பேட்டரியை எக்ஸைட் தயாரித்து வழங்க உள்ளதால், மிகவும் சவாலான விலை பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.