Automobile Tamilan

பின்தங்கிய ஆக்டிவா, முதலிடத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் – பிப்ரவரி 2019

hero bikes

இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையில் முதன்மையான டூ வீலராக விளங்கும் ஆக்டிவா ஸ்கூட்டர் கடந்த 6 மாதமாக ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கிடம் முதலிடத்தை இழந்துள்ளது. இதன் மூலம் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் மாடல் மீண்டும் தனது முதலிடத்தை பெற உள்ளது.

பல வருடங்களாக முதலிடத்தில் இருந்த ஸ்பிளென்டர் பைக் மாடலை பின்னுக்கு தள்ளி ஹோண்டா முதலிடத்தை கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பெற்று வரும் நிலையில், தொடர்ச்சியாக கடந்த 6 மாதங்களாக முதலிடத்தை ஆக்டிவா மாதந்திர விற்பனையில் இழந்துள்ளது.

விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – பிப்ரவரி 2019

தொடர்ந்து சில மாதங்களாக இந்திய மோட்டார் வாகன சந்தை விற்பனை சரிய தொடங்கியுள்ள நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா போன்ற முன்னணி நிறுவனங்களின் விற்பனையிலும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்தை இழந்து ஹீரோ ஸ்பிளென்டர் தனது முந்தைய நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. கடந்த வருடம் பிப்ரவரியில் 247,377 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 2019-ல் 205,239 ஸ்கூட்டர்கள் மட்டும் விற்பனை ஆகியுள்ளது.

முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோவின் ஸ்பிளென்டர் மாடல் பிப்ரவரி 2018-ல் 238,722 ஸ்பிளென்டர் பைக் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 2019-ல் 244,241 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

125சிசி சந்தையில் சிறப்பான வளர்ச்சியை ஹோண்டா சிபி ஷைன் பதிவு செய்து வருகின்றது. அதே வேளை பிரபலமான ஹீரோ கிளாமர் முதல் 10 இடங்களில் இடம்பிடிக்க தவறியுள்ளது.

டாப் 10 டூவிலர்களில் மூன்று ஸ்கூட்டர்கள் இடம்பெற்றுள்ளன. அவை ஆக்டிவா, ஜூபிடர் மற்றும் ஆக்செஸ் ஆகும்.

 

விற்பனையில் டாப் 10 டூ-வீலர்கள் – பிப்ரவரி 2019

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் பிப்ரவரி 2019
1 ஹீரோ ஸ்பிளென்டர் 2,44,241
2. ஹோண்டா ஆக்டிவா 2,05,239
3. ஹீரோ HF டீலக்ஸ் 1,84,396
4. ஹோண்டா சிபி ஷைன் 86,355
5. பஜாஜ் பல்சர் 84,151
6. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 75,001
7. ஹீரோ பேஸன் 67,374
8. பஜாஜ் பிளாட்டினா 53,044
9. டிவிஎஸ் ஜூபிடர் 48,688
10. சுசூகி ஆக்செஸ் 48,265

Exit mobile version