Automobile Tamilan

பால் மற்றும் பேப்பர் போல வீடு தேடி வரும் பெட்ரோல்,டீசல்..!

பெங்களூரு மாநகரில் மைபெட்ரோல்பம்ப் (MyPetrolPump) என்ற நிறுவனம் வீட்டுகே பால் மற்றும் செய்தித்தாள் வருவது போல பெட்ரோல், டீசல் போன்றவற்றை கொண்டு வந்து சேர்க்கின்றது. ஆரம்பகட்டமாக பெங்களூரு நகரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல்

நாட்டிலே முதன்முறையாக பெங்களூரு மாநகரில் மை பெட்ரோல் பம்ப் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் வீடு தேடி பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை டெலிவரி செய்ய தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச டெலிவரி கட்டணமாக ரூ.99 வசூலிக்கும் இந்நிறுவனம் உங்கள் இருப்பிடத்துக்கே டீசல் , பெட்ரோல் போன்றவற்றை டெலிவரி செய்கின்றது.

இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கில் பொருத்தப்பட்டுள்ள டேங்க் வாயிலாக பெட்ரோலிய பொருட்களை டெலிவரி செய்கின்றது. சில மாதங்களுக்கு முன்னதாக பெட்ரோலிய துறை அமைச்சர் வீட்டுக்கே பெட்ரோல் டெலிவரி செய்வது குறித்து ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

கட்டண விபரம்

முதல் 100 லிட்டர் வரையிலான பெட்ரோல் , டீசல் போன்றவற்றுக்கு டெலிவரி கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.99 வசூலிக்கப்படுகின்றது. அதற்கு மேல் 100 லிட்டருக்கு கூடுதலாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 என்ற விகிதத்தில் வசூலிக்கப்படுகின்றது.

இவர்கள் ஆரம்ப நிலையில் நாள் ஒன்றுக்கு 5000 லிட்டர் டீசல் டெலிவரி செய்து வருகின்றது. குறிப்பாக தற்போது இந்நிறுவனம் 20 வாடிக்கையாளர்கள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர். இவற்றில் 16 பள்ளிகளும் அடங்கும். இந்நிறுவனம் பயன்படுத்துகின்ற பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 950 லிட்டர் ஆகும். மேலும் இந்த டேங்க் பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்புகளின் கட்டுமான வழிமுறைகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஆபத்தான சூழ்நிலைகளில் தாக்குப்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதற்கட்டமாக பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள இதே போன்ற திட்டத்தை மற்ற நகரங்களிலும் விரிவுப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version