
பண்டிகை காலம் மற்றும் ஜிஎஸ்டி 2.0 போன்றவை இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு பக்கபலமாக அமைந்துள்ள நிலையில் நவம்பர் 2025 மாதந்திர கார் விற்பனை முடிவில் தொடர்ந்து மாருதி சுசூகி முதலிடத்தில் சுமார் 1,70,971 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.
முன்னணி நிறுவனங்கள் பலவும் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஹூண்டாய் சந்தை சற்று சரிவை கண்டுள்ளது. ஆனால் இந்திய நிறுவனங்களான டாடா மற்றும் மஹிந்திரா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Top 10 Car makers November 2025
முதலிடத்தில் உள்ள மாருதி சுசூகி நிறுவன விற்பனை இம்முறை 20.99% வளர்ச்சியைக் கண்டு ஆண்டில் 1.41 லட்சமாக இருந்த விற்பனை, இந்த ஆண்டு 1.71 லட்சத்தைத் நெருங்கியுள்ளதால் பயணிகள் சந்தையில் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
டாடா மோட்டார்சின் விற்பனையில் நெக்ஸான் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் நவம்பர் 2025ல் 57,436 கார்களை விற்பனை செய்து, 22.04% வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துள்ளது.
டாடாவுக்கு மிக அருகில் வந்துள்ள மஹிந்திரா 1,100 யூனிட்கள் வித்தியாசத்தில் 56,336 யூனிட்கள் டீலர்களுக்கு டெலிவரி வழங்கி மூன்றாம் இடத்தில் உள்ளதால் மஹிந்திராவின் வளர்ச்சி 21.88% ஆக உள்ளது.
ஹூண்டாய் இரண்டாமிடத்திலிருந்து சில மாதங்களாகவே வீழ்ந்து மூன்று மற்றும் நானுகு என மாறி வரும் நிலையில் போட்டியாளர்களை போல இரட்டை இலக்கு வளர்ச்சியை பதிவு செய்யாமல் 4.34% மட்டுமே பதிவு செய்துள்ளது. விற்பனை 50,340 -ஐத் தாண்டினாலும், மற்ற நிறுவனங்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
அடுத்து, டொயோட்டா, கியா மற்றும் எம்ஜி, ஸ்கோடா உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
| நிறுவனம் | நவம்பர் 2025 | நவம்பர் 2024 | வளர்ச்சி % |
|---|---|---|---|
| Maruti Suzuki | 1,70,971 | 1,41,312 | + 20.99% |
| Tata Motors | 57,436 | 47,063 | + 22.04% |
| Mahindra | 56,336 | 46,222 | + 21.88% |
| Hyundai | 50,340 | 48,246 | + 4.34% |
| Toyota | 30,085 | 25,183 | + 19.46% |
| Kia India | 25,489 | 20,600 | + 24.00% |